சனி, 30 அக்டோபர், 2010

மக்கள் தப்பி ஓடும் அவசியத்தை நிறுத்திவிடும் ஓரிடமாக ஸ்ரீலங்கா மாறிவிடும் என நாங்கள் நம்பலாம்.


ஆக்கம்: சச்சினி வீரவர்தனா
“எவராவது ஏன் எந்தவித அச்சமும் இல்லாதபோது ஸ்ரீலங்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்கு எந்த வித காரணமும் இல்லை. எங்கு வாழ்வதற்கும் அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது.” – கோத்தபாய ராஜபக்
புகலிடம் தேடுபவர்களைப் பற்றியும் வெளிநாடுகளுக்கு கடந்து செல்ல வேண்டி அவர்கள் எடுக்கும் அதிபயங்கர ஆபத்து நிறைந்த சொந்த முயற்சிகள் பற்றியும் நிறையவே எழுதியாகி விட்டது. 1951ம் ஆண்டின் அகதிகள் நிலை சம்பந்தமான ஒப்பந்தத்தின் பிரிவு (1) ல் சொல்லப்பட்டிருப்பது: ஒரு அகதி என்பது ஒரு ஆள் “ கீழ் காணும் ஏதாவது காரணங்களினால் தாம் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்கிற நியாயமான அச்சத்தை கொண்டிருந்தால் - அவையாவன சாதி,மதம், இனம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் அங்கத்தவர், அல்லது அரசியற்காரணம், அவரது தேசிய இனத்துக்குச் சொந்தமான நாட்டக்கு வெளியில் இருத்தல், மற்றும் இயலாத நிலை அல்லது அச்சமுற்ற நிலையில் தன்னை அந்த நாட்டின் பாதுகாப்புக்கு உட்படுத்திக் கொள்ள விருப்பம் அற்றவராக இருத்தல்…..”. மற்றும் புகலிடம் தேடுபவர் எனப்படுவது ஒரு நபர், அவருடைய அல்லது அவளுடைய விண்ணப்பம் அகதி அந்தஸ்தின் அங்கீகாரத்துக்கு வேண்டிக் காத்திருப்பது ஆகும்.உலகின் சரித்திரத்தில் மக்கள் அகதிகளாகப் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப் பட்ட ஏராளமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெளிநாட்டவர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு அகதி அடைக்கலம் வழங்கும்போது கவனிக்கவேண்டிய மிக உயர்ந்த சட்டங்களில் ஒன்று மானிடத்தின் இரக்கம் ஒவ்வொருவருக்கும் நல்லவண்ணம் கிட்டவேண்டியது என்பதாகும். அது தகுந்த பாதுகாப்பை வழங்குவதுடன் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், இறுதியாக வாழ்ந்து தாங்கள் அனுபவித்த பயங்கரக் கதைகளை உலகிற்கு சொல்வதற்கும்.
டெய்லிமிரர் பத்திரிகை சமீபத்தில் பாதுகாப்புச் செயலர் சொன்னதாக வெளியிட்டிருப்பது, “அவுஸ்திரேலிய அரசாங்கம் தாங்கள் புகலிடம் வழங்குவதற்காக கவனத்திலெடுக்கும் எவரிடத்தும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் புகலிடம் வழங்குவதை நிறுத்தி விட்டால் இந்த நடைமுறைகளை நிறுத்துவது மிக எளிதாக இருக்கும்’ என்பதாக. அந்தக் கட்டுரை மேலும் சொல்வது இராணுவத்தினர் அவ்வாறான படகுகள் ஸ்ரீலங்கா கரையை விட்டு புறப்படுவதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி விட்டதால் அந்த மக்கள் வேறுநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து புகலிடம் தேட முயல்கிறார்கள். எனவே அது எடுத்துக் காட்டுவது, சில ஸ்ரீலங்கா வாசிகள் இங்கிருந்து வெளியேறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்கிறார்கள் என்பதனையே.
எப்படியாயினும் கேள்வி என்னவெனில் ஏன் இந்த அரசாங்கங்கள்” புகலிடம் கோரும் ஸ்ரீலங்கா வாசிகள் மீது அனுதாபம் காட்டுகின்றன, அதை நிறுத்துவதற்கு முயற்சிகள் எதையும் மேற்கொள்ளுகிறதா” எனும் சரியான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதுதான்.துரதிருஸ்டவசமாகக் காணப்படும் நாங்கள் குழப்பமடைந்திருக்கும் விடயமானது ஏன் இந்த மக்கள் நாட்டிலிருந்து சென்று தாமாக விலகிச் செல்பவர்களுடன் ஒன்றுசேர்ந்து புகலிடம் தேடும் குழுக்களாக முயற்சிக்கிறார்கள் என்பதுதான்.
இந்த ஒழுங்கு முறையானது இந்த முயற்சியினால் ஆதாயம் ஈட்ட முயல்பவர்களுடன் தீர்த்து வைக்கப் படவேண்டியது. இதன் கருத்து புகலிடம் வழங்குவதை நிறுத்திவிட வேண்டும் என்பதாகுமா? உண்மை என்னவெனில் எத்தனையோ பேர்களுக்கு புகலிடம் வழங்கப் பட்டது சிலவற்றைக் கருத்தில் கொண்டே.எப்படியாயினும் புகலிடம் தேடுபவர்களின் அடையாளமானது சொகுசு வாழ்க்கை வேண்டி பசுமையைத் தேடி ஓடும் மற்றவர்களைப் போல நகைப்புக்கிடமானதாகவோ குழப்பமானதாகவோ இருக்கக் கூடாது.
படிப்புக்காரணமாகவும் மற்றும் தொழில் நிமித்தம் உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாடுகளில் வதிவிடம் தேடியவர்களில் சிலர் நாடு திரும்புவதைத் தெரிவு செய்ய விரும்புவார்கள். மற்றும் சிலர் அங்கேயே தங்கிவிட விரும்புவார்கள். இதில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது,அவர்களுக்கு தங்களுக்கு வேண்டியதைத் தெரிவு செய்யும் சுதந்திரம் உள்ளது. அதற்கான காரணங்கள் அச்சம் காரணமாகவோ,சூழ்நிலையினாலோ அல்லது சாதாரணமாக அவர்களுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை வேண்டியோ எதுவானாலும் அது குடியேற்ற அதிகாரிக்கும் தனிப்பட்டவர்களுக்கும் இடையில் உள்ள விடயம்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் நிலையம் நிரல் படுத்தியிருப்பது, ஒரு பொருளாதாரக் குடியேற்றவாசி எனப்படுபவர்,”தனது மனச்சாட்சியின் தெரிவுப்படி தனது சொந்த நாட்டை விட்டுப் பிரியவும், எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் மீண்டும் அங்கு செல்லக் கூடியவர்” என்பதாகும்.சிறந்த பொருளாதார வளங்களை அடைய முயன்ற போதிலும்கூட பெரும்பாலான ஸ்ரீலங்கா வாசிகள் இந்தப் பிரிவுக்குள்ளேயே அடங்குவதைக் காணமுடிகிறது. ஆனால் புகலிடம் தேடுபவர்கள் விடயத்தில் அது உண்மையாக இருப்பின் இந்த இரு பகுதியினரையிட்டும் குழப்பமடையும் தவறை நாம் செய்து விடக்கூடாது. நாம் இரண்டு வழிகளையும் கொண்டிருக்க முடியாது.
ஸ்ரீலங்கா தசாப்தங்கள் நீண்டு நின்ற தனது போரின் வடுக்களிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது காலமெடுக்கும். மக்கள் தங்களின் வாழ்க்கையை காவல்காத்துக் கொண்டு சுகமான ஒரு வாழ்க்கையைப் பெறுவதற்காக,தலைமுறைகளாகக் காத்திருக்க வேண்டுமா? தகுந்த வேலைப் பயிற்சிகள் சிறந்த கல்வித் தகைமைகள் போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் ஸ்ரீலங்கா அவர்களுக்கு எதைக் கொடுத்து விட முடியும். இதில் இன்னமும் கவர்ச்சிகரமான விடயம் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் வாழ்க்கைமுறையோடு நம்மதை ஒப்பிடுவது.
இறுதியாக அபிவிருத்தி அடைந்த நாடுகளை வெற்றிகரமாகச் சென்றடைந்தவர்கள் அவர்களுக்கு இங்கு கிடைத்திருப்பதைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையை அங்கு வாழ்கிறார்கள்.அவர்களின் பிள்ளைகள் நம்பிக்கையுடனும் வாழ்க்கையில் ஒரு பிடிப்புடனும்,வெறுப்பு,பாரபட்சம் எதுவும் எஞ்சியிருக்காமல் வாழ்வார்கள். இனிவரும் காலங்களில் கட்டாயமாக மக்கள் வெளியேறுவதை நிறுத்திவிட்ட ஒரு நாடாக ஸ்ரீலங்கா மாறிவிடும்,அனைத்து ஸ்ரீலங்கா வாசிகளும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் நம்பலாம்.
சில வேளைகளில் புகலிடம் வழங்கும் விடயம் அந்தந்த நாடுகளின் குடியேற்ற அதிகாரிகளின் எண்ணப்படியான விடயமாக இருக்கலாம். அவர்கள் அதன் பின்விளைவுகளை அல்லது நடைமுறைகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தன் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. அதிலும் மோசமானது ஒரு நபர் தனது உயிரைப்பற்றிய எந்த விதப் பயமும் இல்லாமல் அகதியாக தப்பி ஓட நிர்ப்பந்திக்கப் படுவது. ஏனெனில் மக்கள் சாதாரணமாக சுகவாழ்வு வேண்டி பசுமையான இடங்களைத் தேடி ஓடுவதால் புகலிடம் தேடிப் போகிறவர்களும் அதே காரணத்துக்காகத்தான் போகிறார்கள் என அர்த்தமாகி விடாது. அநேகமானவர்கள் இப்படிச் செய்வதனால் இன்னமம் ஸ்ரீலங்காவில் நிறைய வேலைகள் செய்யவேண்டி உள்ளது என்பது தெளிவாகிறது.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக