ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கொளத்தூர் மணியை சுட வந்த போலீஸ் மீது தாக்குதல்


இன்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் காவல்நிலையத்திலும் இன்று மாலை 6 மணிக்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.  காவல்நிலையத்தில் உள்ள கடவுள் படங்களுக்கு மாலை அணிவித்து,  துப்பாக்கிகளுக்கு பொட்டு வைத்து, சந்தனம் தெளித்தனர்.
அப்போது அங்கு வந்த பெரியார் திராவிட கழகத்தினர்,  ‘’மத விசயங்களை பின்பற்றுவது அரசு விதிகளுக்கு புறம்பானது.  

அரசு விதிகளை மீறும் எந்த செயலையும் எதிர்க்க வேண்டும் என்று பெரியார் சொல்லியிருக்கிறார். அதனால் காவல்நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை எதிரிக்கிறோம்’’ என்று கூறினர்.

இதனால் காவலர்களுக்கும், பெதிகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றியதால் பெதிகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை கேள்விப்பட்டு பெதிக தலைவர் கொளத்தூர் மணி அங்கே வந்தார்.  அப்போது அவரை நோக்கி துப்பாக்கியை காட்டிய காவலர் ஒருவர், ‘’இதற்கு மேலும் ஒரு அடி எடுத்துவைத்தால் சுட்டுவிடுவேன்’’ என்று மிரட்டினார்.

அந்த சமயம் காவலர் மீது ஒருவர் பாய்ந்து தாக்கினார்.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.  எனவே சம்பவ இடத்திற்கு எஸ்.பி. ஜான்நிக்கல்சன், டிஐஜி வெங்கட்ராமன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

பதட்டம் நிலவுவதால் கொளத்தூர் மணி மேட்டூரில் உள்ள பெதிக அலுவலகத்தில் தங்கி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக