திங்கள், 25 அக்டோபர், 2010

கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க…….

ஐரொப்பாவில் இலக்கியச்சந்திப்பு நடாத்தி தண்ணிசாந்தி செய்த கூட்டம் கனடாவில் பன்முகவெளி என்கிற பெயரில் தங்களுடைய திருவிளையாடலை ஆரம்பிக்க வெளிக்கிட்டாங்கள். அதற்கு விளம்பரம் வேறு வெளியிட்டிருக்கிறாங்கள். பிரான்ஸ் தண்ணியடிபுகழ் கூட்டமும் ஜேர்மனியில் தண்ணியடியில் பிரசித்தி பெற்றவரும் கனடாவில் தங்கள் புகழை பரப்ப கிளம்பிட்டாங்கள். இதற்கு மனோரஞ்சன், தாயகம் குருசோவ் விஷயம் தெரியாமல் இந்த பன்முகவெளித் தவறணையில் பங்கு பெறவுள்ளதும் கவலைக்குரிய விடயமாகும்.
ஐரொப்பாவில் எல்லாம் செய்து ஓய்ந்துபோய்விட்டது. இனி செய்ய என்னவிருக்கிறது. தண்ணியடிச்சு அம்பலமாகிவிட்டாச்சு. எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. கனடாவில் கடைவிரிச்சுப்பார்ப்போமா.   சரி. இதில் கலந்து கொள்பவர்களில் சுசீந்திரனை தவிர ஏனையோர் புலி எதிர்ப்பாளர்கள். தலித் முன்னணியைச் சேர்ந்தவர்கள். சுசீந்திரனுடன் எப்படி ஒத்துப்போகிறார்கள். புலிகள் வன்னியில் ஓகொ என்று இருந்த காலத்தில் புலிகளுடனான தொடர்பில் சுசீந்திரனுக்கு எதுவித சிக்கலும் இருக்கவில்லை. அவர் சார்ந்திருந்த என்ஜீஓ புலிகளுக்காகவே வெளிநாடுகளில் இயங்கியது. இது எல்லாம் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரியாதா?. ஜெர்மனியில் புலி எதிர்ப்பாளர்கள் நடாத்திய கூட்டமொன்றில் தண்ணியைப்போட்டு சுசீந்திரன் செய்த கூத்துக்கள் இவர்களுக்கு புரியாதா? அந்தக்கூட்டத்தில் தலித்முன்னணியினரும் பங்கு கொண்டிருந்தார்களே!
புலி எதிர்ப்பாளர்கள் நாடத்துகின்ற கூட்டத்தில் சுசீந்திரன் கலந்து கொள்வது எதற்காக?. ஏற்கனவே இலக்கியச்சந்திப்பை கோமா ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டாச்சு. இப்போ பன்முகவெளி ஆரம்பிச்சாச்சு. அதிலும் தண்ணியடிச்சு தண்ணியடிச்சு அதனையும் கொஞ்சக்காலத்தில் கோமா ரேஞ்சுக்கு கொண்டு போய் விடும் வரை சுசீந்திரனுக்கு நிம்மதியிருக்காது.
சரி இதற்கான அறிவிப்பைப் பார்ப்போம்
நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்த்தப் படுவதற்காகத் தயார்நிலையில் திட்டமிடப் பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், நாடகங்கள், திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்தப் பன்முகவெளி
இப்படித்தான் ஒவ்வொரு புதுமுயற்சியையும் சொல்லி தொடங்குவார்கள். பிறகு நாடு நாடாய் கொண்டு திரிவாங்கள். எதையும் உருப்படியாக செய்யமாட்டாங்கள். பிறகு அந்த முயற்சிகளுக்கெல்லாம் பாடை கட்டி விட்டு புதிதாக என்னோன்றை தொடங்குவார்கள். ஐரொப்பாவில் ஆரம்பித்தார்கள். இப்போ இங்கு அம்பலமாகி விட்டதால் கனடாவில் தொடங்கவுள்ளார்கள். என்ன கொஞ்ச தண்ணியடி இலக்கியவாதிகள் சேருவார்கள். அவ்வளவுதான்.
இதுதான் நிகழ்ச்சிக்கான அறிவித்தல்.  சென்று பார்த்து பயனடையுங்கள்
நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்த்தப் படுவதற்காகத் தயார்நிலையில் திட்டமிடப் பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், நாடகங்கள், திரைப்படங்களாகவும் பதிவைமுன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து
விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்தப் பன்முகவெளி
சுய அறிமுகத்துடன் ஆரம்பம்
நவம்பர் 20 சனி காலை 9.00மணி
இடம்:
The Church Of
St Columba And All Hallows
2723 Saint Clair Avenue East
East York
ON. M4B 1M8
1. பேசப்படாத ஈழத்து இலக்கிங்களும் பேசப்படவேண்டிய ஐரோப்பிய இலக்கியங்களும்.
ந.சுசீந்திரன் – ஜேர்மனி.
2. இலங்கையின் தமிழ் முஸ்லீம் உறவும் சிக்கலும்.
எம்.ஆர். ஸ்ராலின் – பிரான்ஸ்
ஒருபாலுறவு – வாழ்வும் அரசியலும்.
டன்ஸ்ரன்- கனடா
4. அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்.
ஜோர்ஜ் குருசேவ் – கனடா
5. தீண்டாமைக் கொடூரங்களும் தீமூண்ட நாட்களும்.
தோழர் யோகரட்ணம். பிரான்ஸ்
நவம்பர் 21 ஞாயிறு மதியம் 12.30மணி
6. தமிழ்த்துரோகம்
எஸ். மனோரஞ்சன் – கனடா
7. இலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியும்.
அசுரா – பிரான்ஸ்
8. மடை சூனியம் – நாடகம்
ஜோர்ஜ் குருசேவ் – கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக