திங்கள், 25 அக்டோபர், 2010

வடக்கில் ஒரு இலட்சம் பேர் மீள்குடியமர்த்தப்பட உள்ளனர் - பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு


வடபகுதியில் இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை பகுதியில் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ் வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதிய மைச்சர் முரளிதரன்,இலவசமாக எல்லாவற்றையும் தருவார்கள் என்று எதிர்காலத்தில் நாங்கள் கையேந்தியிருப்பதை தவிர்க் கவேண்டும்.நாங்கள் கடுமையான உழைப்பாளிகள். அந்த உழைப்பை நாங்கள் திரும்பக் கொண்டுவர வேண்டும்.

இதே வேலைத் திட்டத்தை நான் யாழ்ப்பாணத்திலும் செய்து வருகின் றேன்.இன்று மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருப்பதால் சகல பொறுப் புக்களும் என் தலை மேல் உள்ளது. இன்னும் அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை குடியேற்ற வேண்டிய தேவையிருக்கின்றது. உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 67ஆயிரம் பேரும் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள் 27ஆயி ரம் பேரும் புத்தளத்தில் 60ஆயிரம் பேர் குடியேற்றப்படுவதற்கு இருக்கின்றனர்.

இவ்வாறான பாரிய பொறுப் பில் நாங்கள் இன்று இருக்கின் றோம். நான் நினைகின்றேன் வெகு விரை வில் வன்னி மக்களையும் பாரிய அபிவிருத்தி நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்று. ஆனால் நாங்கள் எல்லோரும் ஒற்றுமை யாக இருப்பதன் மூலமே அபிவிருத் தியை கொண்டுவரலாம். ஆனால் பிரிந்திருந்து செயற்பட்டால் வாய்ப்பை தவற விடுவோம்.அபிவிருத்தியென்பது அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

அதனால் எமக்கு எந்த அரசியல் வாய்ப்பாக இருக்கின்றதோ அத னையே வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். எந்த நாளும் உரிமையை பேசிப்பேசி இருக்கிறதையும் இல்லாமல் செய்யவேண்டாம்.நான் இன் னும் தொப்பிகலக் காட்டில் இருந்தி ருந்தால் இதில் இருக்கின்ற மிச்ச பிள் ளைகளும் இருந்திருக்காது. ஒரு வரையும் உயிரோடு பார்த்திருக்க முடியாது.அப்படியே எல்லோரும் குட்டிச்சுவராக போயிருப்போம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக