வெள்ளி, 1 அக்டோபர், 2010

விழுப்புரம்:பேராசியரை கத்தியால் குத்திய மாணவன்

கல்லூரியில் பேராசிரியரை கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவன், இளம் குற்றவாளிகளுக்கான சிறையில் அடைப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே  திருகோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., 3ஆம் ஆண்டு படித்து வருபவர் மணிகண்டன். இவர் சரியாக கல்லூரிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் பி.சி.ஏ.,  கம்யூட்டர் சயின்ஸ் பேராசியரான சுரேஷ்குமார், மாணவன் மணிகண்டனை கண்டித்துள்ளார். இந்நிலையில் பேராசியரிடம் பாடத்தில் சந்தேகம் உள்ளது என்று தனியாக அழைத்த மணிகண்டன் எதிர்பாரத விதமாக கத்தியை எடுத்துள்ளான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், தப்பிக்க முயற்சி செய்வதற்குள், முகம் மற்றும் காதில் கத்தியால் மணிகண்டன் குத்தியுள்ளான். இதில் படுகாயம் அடைந்த பேராசிரியர் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருக்கோவிலூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மாணவன் என்பதால், மணிகண்டனை செஞ்சியில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சிறையில் போலீசார் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக