வெள்ளி, 1 அக்டோபர், 2010

நேட்டோ படையின் 27 எரிபொருள் டேங்கர் எரிப்பு : பாகிஸ்தானில் சதி செயலில் ஈடுபட்டது யார்

ஆப்கானிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நேட்டோ படையினரின் எரிபொருள் டாங்கர் மீது தாக்குதல் நடத்தி எரிக்கப்பட்டது. இச்சம்பவம் சர்வதேச அளவில் நேட்டோ படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பாகிஸ்தானின் , ஆப்ககன் எல்லையோர சிந்து மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என இன்னும் அறியப்படவில்லை.

முகமூடி அணிந்து வந்தனர் :  கடந்த ஒரு வருடத்தில் நேட்டோ படையினரின் டாங்கர்கள் 100 க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது குறித்த போலீஸ் அதிகாரி அகம்மது சாண்டியோ கூறுகையில்; முகத்தை மூடிய சிலர் சிக்காபூர் டவுண் அருகே இந்த வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியும் அட்டூழியம் செய்துள்ளனர். இதில் 27 டேங்கர்கள் தீ பற்றி எரிந்தது என்றார்.

இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான எரிபொருள் தீ பற்றி எரிந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆப்கன் செல்ல வேண்டிய 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் நேட்டோ படையினர் தாக்குதலில் பலியான 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இந்த விஷயம் தொடர்பாக இது வரை வாய்திறக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என மர்மம் நீடிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக