வெள்ளி, 15 அக்டோபர், 2010

A.R.Rahman நடிப்புத்துறையிலும் அடியெடுத்து வைக்கிறார்

மம்முட்டியுடன் ஏ. ஆர். ரகுமான் புது டிராக் 

    இசையின் சிகரம் தொட்டு உலகப்புகழ் பெற்றுள்ள இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமான் நடிப்புத்துறையிலும் அடியெடுத்து வைக்கிறார்.   ஆஸ்கர் நாயகன் நடிகனாக உதயமாக இருப்பது மலையாளத் திரை வானில்.  மம்முட்டி ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘டிராக் வித் ரகுமான்’ என்னும் படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ரகுமான். 


 
மம்முட்டி, ஏ.ஆர்.ரகுமான் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜெயராஜ். இந்த படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக உள்ளது.  ஜெயராஜ் இயக்கிய படங்கள் அனைத்துமே இசையால் வெற்றி பெற்றவை. இந்தப் படத்திற்கு ஸ்ரீநிவாசன் இசையமைக்கிறார். 

ஒரு துப்பறியும் கதை அமைப்புடன் கூடிய இந்தப் படத்தில், துப்பறியும் நிபுணராக நடிக்கிறார் மம்முட்டி. அதில் சில காட்சிகளில் ஏ.ஆர்.ரகுமானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைக்கலாம் என நினைத்து கேட்டிருக்கிறார்கள்.   இசை சம்பந்தப் பட்ட படம் என்பதால் கேட்டவுடன் சம்மதம் தந்துவிட்டாராம் ரகுமான். 

இனி நடிப்பிலும் கலக்க வருகிறார் இசை நாயகன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக