வெள்ளி, 15 அக்டோபர், 2010

AGAIN: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியம் : ராமதாஸ் நிம்மதி

உடம்பை பார்த்துக்கோங்க...'' -ராமதாஸ். ""உடம்பை நான் பார்த்துக்கிறேன்... உறவை நீங்க பார்த்துக்கோங்க...'' -முதல்வர் கருணாநிதி. நீண்ட இடைவெளிக்குப் பின், கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் தான், முதல்வரும், ராமதாசும் இப்படி பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பவர் ராமதாஸ். கூட்டணியை மாற்றி அமைத்து போட்டியிடும் பார்முலாவிலும் அவர் வெற்றி கண்டவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, ராமதாசுக்கும் கடந்த லோக்சபா தேர்தல் முடிவு சரியான பாடத்தை கற்பித்தது. அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும், பா.ம.க., மண்ணைக் கவ்வியது. சொந்த காரணங்களுக்காக, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு தூது விட்டார். அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் எதிர்பார்த்தார். அதில், ஏமாற்றம் மிஞ்சியதால், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறமுடியாமல் தவியாய் தவித்தார். கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு, தி.மு.க.,வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே, எந்தக் கூட்டணியில் அதிக சீட்டுகள் கிடைக்கிறதோ, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு, ஒரு பக்கம் அ.தி.மு.க., தரப்பிலும், மற்றொரு பக்கம் தி.மு.க., தரப்பிலும் திரைமறைவு பேச்சுக்களை பா.ம.க., நடத்தி வந்தது. பூரண மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை, ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்பினார். ஆனால், முதல்வரின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை.

இந்நிலையில், 27 ஜாதி சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் ராமதாஸ் அவசர, அவசரமாக கூட்டினார். அதில், "ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, 11ம் தேதிக்குள் முதல்வரை சந்தித்து வலியுறுத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால், போராட்டத்தில் குதிப்போம்' என, ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை சோனியா வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முன்நிறுத்தி பேசினர். இதனால், அதிருப்தியான முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு, "செக்' வைக்கும் வகையிலும், சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி கதவை திறந்து வைக்கும் வகையிலும், ராமதாசை 13ம் தேதி சந்திக்க முதல்வர் அனுமதி அளித்தார்.

மிகவும் உற்சாகத்துடன், 27 ஜாதி சங்கத் தலைவர்கள் புடைசூழ, கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். அச்சந்திப்பு தான், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பா.ம.க., ஐக்கியமாக வழிவகுத்துள்ளது. இருவரும் இணக்கமாக பேசி நீண்ட நாட்கள் ஆன நிலையில், இருவரும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே, கூட்டணி பேச்சையும் சந்தடி சாக்கில் துவக்கியுள்ளனர். "இனி, ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திப்பார்' என, முதல்வரிடம் ராமதாஸ் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பா.ம.க, நடந்துகொள்ளும் என்பதையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் தவியாய் தவித்துவந்த பா.ம.க., வுக்கு, இந்த சந்திப்பு மூலம் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாவது ஊர்ஜிதமாகியுள்ளது.

கொடுப்பதை வாங்க வேண்டியது தான்: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நுழைந்திருப்பதையடுத்து, தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., 31 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில், கடந்த தேர்தலை விட, கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என பா.ம.க., நினைக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விட, பா.ம.க.,வுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது, பா.ம.க.,வுக்கான தொகுதிகள் கண்டிப்பாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Kumaresan - Singapore,சிங்கப்பூர்
2010-10-15 05:05:11 IST
உங்களால மட்டும்தான் டாக்டர் இப்படி கூசாம விழ முடியும். இனி எல்லா அறிக்கையும் அம்மாவையும் விஜயகாந்தையும் பற்றிதான் அசத்துங்க .......
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-10-15 04:58:57 IST
விட்டது சனி. இப்போது அதிமுக திமுகவை விட பல மடங்கு பலம் மிக்க கட்சியாக மாறி இருக்கிறது. சனிதாங்கி எங்கே அதிமுகவில் கூட்டணி வைத்துவிடுவாரோ என்று கலக்கமாக இருந்தது, நல்ல வேலை ஒரு வழியா அம்மாவை பிடித்த சனி மஞ்ச துண்டை ஒட்டிகொண்டது. இனி எங்க அம்மாவுக்கு வெற்றி தான்....
யாழினி - மெல்பெர்ன்,ஆஸ்திரேலியா
2010-10-15 04:41:09 IST
ஹ்ம்ம், பூவோடு சேர்ந்த நாறும் மனக்குதா, இல்லன ஒரு பழ கூடைக்குள வச்ச ஒரு அழுகின பழத்தால எல்லா பழங்களுமோ அழுகி போகுதானு அடுத்த வருடம் தெரியும்....
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-10-15 04:21:47 IST
ஒரு வழியா ஒழிஞ்சுது ஏழரை சனி...... தி.மு.க வுக்கு இனி கஷ்டகாலம் தான்...
குண்டலகேசி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-15 04:15:48 IST
ஜாதி வெறி புடிச்ச தலைவனுகள கூட்டிகிட்டு , இந்த மரம் வெட்டி, கருணாநிதிய சந்திசுட்டார் பார்த்தீங்களா ? இனி ஊழல் பண்ணி கொள்ளையடிக்க தொகுதி பங்கீடுன்கிற பேர்ல காக்காய் எச்ச சாப்பாட்டுக்கு அடிச்சுக்குற மாதிரி அடிச்சுகுவானுங்க. 5 அறிவு மட சோம்பேறி தமிழன், இவனுக எறியிற பணத்துக்கும் , இலவச பொருளுக்கும் ஆச பட்டு ,ஓட்ட போட்டுருவானுங்க ,போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ,...
ஜீவா - Tirunelveli,இந்தியா
2010-10-15 03:47:23 IST
இந்த ..... போற ராமதாஸ் 27 டப்பா நிறைய சோப்பு பொடி கொண்டு பொய் தாத்தாவோட ஆடை துவைக்க ஒப்பந்தம் போட்டுட்டார். மக்களே ரெடி யா இருங்க. இந்த ஆளு வந்து மது விலக்கு, தூய தமிழ் அப்பிடி இப்பிடின்னு பேசுவார்...துடைப்ப கட்டைய எடுத்து இவனுக்கு மைக்செட் கட்டுறவன அடிங்க. அப்போதான் இனிமே எவனும் இவன் பேசுறத கேக்க மாட்டான்....
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-10-15 03:27:34 IST
ஐயோ இப்பவே கண்ண கட்டுதே ... ஆனா ஒன்னு இனி கொஞ்சம் நாட்கள்ளுக்கு இருவரும் அறிக்கை விட்டு மக்களை குழப்ப மாட்டார்கள்... இனி அடுத்த 100 புது டாஸ்மாக் கடைக்கு RAMADOSS தான் ரிப்பன் கட் பண்ண போறாராம் .....முதல் போனி ஒரு கட்டிங் போட்டுட்டு முதல்வரை புகழ்ந்து பேசுவார்......
எழில் - தஞ்சை,இந்தியா
2010-10-15 03:25:03 IST
குருடன் + செவிடன் =...............? பயந்தகோழி+வெத்துவேட்டு=............? பொறுத்திருந்து பார்போம். கலைஞர் டிவி நடிகர்கள், நாடக கலைஞர்களையும் கூட்டணிக்கு கூப்பிடுகிறராம்....
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-15 03:04:16 IST
இந்த சனிதாங்கிக்கு தைரியம் இருந்தால் வரபோகும் பொது தேர்தலில் தனித்து நின்று யாருடனும் கூட்டு இல்லாமால் ஒரு தொகுதியில் வெற்றிபெற்று காட்டட்டும்.முடியுமா சனிதாங்கியே? அடுத்த தேர்தலில் உன்னை கூட்டணியில் சேர்க்கும் எந்த கட்சியும் உருபடாது,காரணம் உங்கள் நாக்கில் சனி,நீங்கள் இருக்கும் எந்த இடமும் வளராது தேராது,என்று ஜாதியை விடுகிரிரோ அன்று தான் நீங்களும் உங்கள் கட்சியும் உருப்படும்.இந்த தேர்தலில் உமக்கு கிடைக்கும் அடி பலமாக இருக்கணும். மண்ணை கவ்வனும்..நேற்றைய தினமலரில் வாசக அன்பர்கள் ,,,நம்ம சனிதாங்கியை பின்னி பெண்டுபெடல்..எடுத்து கசக்கி பிழிந்து குப்பையாக சக்கையாக மென்று துப்பிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..அதை போலவே இன்றும் தொடரட்டும். பன்றி காய்ச்சல் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட கொடுமையானது ஜாதி வெறி பிடித்த இந்த ராமதாசு சனி,,,நண்பர்கள் கைபுள்ளே மற்றும் சிங்கபோர் ராம் இவர்களின் வரவேற்க்கபடுகின்றன....
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-10-15 03:00:00 IST
எவ்வளவு நாளைக்குத்தான் குனிய வச்சு, குனிய வச்சு, குமுரி எடுப்பிங்க..நான் தான் தி.மு.க கூட்டணியில், அடக்கமாயிட்டேனே..சாரி..ஐக்கியமாயிட்டேனே......
வினோத்குமார் - singapore,சிங்கப்பூர்
2010-10-15 02:58:52 IST
அன்பான வாசகர்களே உங்களுக்கு எல்லாம் துணிவு இருந்தால் உங்கள் முகவரியை கொடுத்து விமர்சனம் பண்ணுங்கோ ... புரியுதா .... சும்மா பொட்ட பசங்க மாதிரி வரம்பு மீறி விமர்சிகாதிங்க .... டாக்டர் அய்யா அவர்கள் பெற்று தந்த MBC கோட்டா உதவியால engineering படிக்கச் முடிந்தது என்னால் ..... என் தலைமுறை மட்டும் என்றி யார் யார் MBC கோட்டா மூலம் படிசாங்கலோ அவர்கள் அனைவரும் ஐயாவுக்கு நன்றி கடன் பட்டவர்கள் தான்......
ராஜ் - பெங்களூர்,இந்தியா
2010-10-15 02:51:15 IST
இன்றைக்கு அதிக கமெண்ட் இதுக்குத்தான் ....
raja - baghdad,இந்தியா
2010-10-15 02:50:34 IST
the world'S best comedy ............
குமார் - சென்னை,இந்தியா
2010-10-15 02:41:36 IST
என்னப்பா கைப்புள்ள..கமெண்ட்ஸ் ஸ்டார்ட்ஸ் பண்ணுங்க..இன்னிக்கு வயிறு புண்ணாவது உறுதி.....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-15 02:40:29 IST
என்னடா நம்மளமாறி இழிச்சவாயனுகள மட்டும் தவறாம சனி புடிக்கிது. இந்த மஞ்சதுண்ட மட்டும் புடிக்க மாட்டேங்குதுன்னு நெனச்சு நெனச்சு பொலம்பிட்டு இருந்தேன். டக்குன்னு புடிச்சிடிச்சு. அந்தநாள் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள், அத என்னோட டைரில நல்லா குறிச்சு வெச்சுட்டேன். அன்னிக்குத்தான் மஞ்சதுண்டுக்கு சனி புடிச்ச நாள் ன்னு குறிச்சு வெச்சு இருக்கேன். தேர்தல் முடிஞ்ச உடனே, நான் தினமும் அந்த டைரிய எடுத்து எடுத்து பாத்து கெக்கே...பெக்கே... கெக்கே...பெக்கே... ன்னு தரைல உருண்டு உருண்டு சிரிப்பேன். எல்லா சகுனமும் நல்லா இருக்கு. நமக்கு நல்ல காலம் வர போறா மாறி தெரியிது. எல்லோரும் சக்கரை பொங்கல் எப்படி வெக்கிரதுன்னு கத்துகோங்க சீக்கிரம். அந்தம்மாவ புடிச்சிருந்த சனி விலகி, இந்த பக்கம் வந்திடிச்சு. பொதுவா சனி போறப்போ வாரி கொடுத்துட்டு போகும்ன்னு சொல்லுவாங்க. அது கரெக்ட் தான். அந்தமாவுக்கு வாரி வாரி கொடுத்து ஆட்சியவே கைல கொடுக்க போவுது. இந்த சனி தாங்கிய சேத்துக்கிட்ட ஒரே காரணுத்துக்காக துண்டு துண்டோட ஓட போவுது. ஹே... ஹே... ஜாலி. இது மாறி பேசி எல்லோரும் துண்டாருக்கு பீதிய கெளப்புங்க. ம்ம் சீக்கிரம். அதுக்கு பயந்தே துண்டார் இந்த சனி தாங்கிய அடிச்சு தொரத்தட்டும்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-15 02:29:47 IST
இந்த டவுசர் தாசு பண்ணும் இழிவான அரசியலை பார்த்து பார்த்து உண்டான வெறுப்பு, இதை சேர்த்து கொண்ட காரணத்தால் தி.மு.க மீதும் உண்டாகி விட்டது. இந்த ஆளு மேல இருக்கும் வெறுப்பினால், தி.மு.க வுக்கும் ஓட்டுக்கள் குறையும். இந்த கூட்டணி மட்டும் உண்டானால் தி.மு.க வை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது. இந்த பச்சோந்தியால்தான் தி.மு.க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏற்கனவே இந்த மஞ்சதுண்டு மேல இருக்கிற வெறுப்பு, அந்தம்மாவுக்கு ஓட்டு உலுக போவுது. எரியிற நெருப்பில எண்ணெய ஊத்தினா மாறி, இப்போ இன்னும் கொஞ்சம் கூட சேந்து போய்டும். அப்புறம் தி.மு.க காலிதான். சீட்டு கொடுக்கிறேன் சீட்டு கொடுக்கிறேன் ன்னு சொல்லியே கடைசி வரைக்கும் கூட்டிட்டு போய் நம்ப வெச்சு கழுத்தருத்தாலும் டேஞ்சர். அத வெச்சே டவுசர் அரசியல் பண்ணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு பட்டும் படாமல் இருப்பதே தி.மு.க வுக்கு நல்லது. ஆனா இதையெல்லாம் மீறி இந்த கூட்டணி உருவாகனும்ன்னு நான் வேண்டிக்கிறேன். அவன்அவன் கடுப்பாகி, இதுவரைக்கும் ஓட்டு போடாதவன் எல்லாம் போய், எல்லா ஓட்டையும் அந்தம்மாவுக்கு குத்து குத்துன்னு குத்தி, இவங்க ரெண்டு பேருக்கும் தலா ரெண்டு சீட் மட்டும் கிடைக்கணும். ஏண்டா இவன சேத்துனோம்ன்னு நெனச்சு நெனச்சு தி.மு.க அடிச்சுக்கிட்டு அழுவனும். அதைய பாத்து நான் நல்லா சிரிக்கணும். தாசு ஒரு சனி பகவான். இப்போ அது துண்டோட காலை சுத்திடிச்சு டோய். எல்லோரும் நல்லா வயிரெறியுங்கள். எரிச்சலுடனே ஓட்டு சாவடிக்கு செல்லுங்கள்....
ராஜன் - சென்னை,இந்தியா
2010-10-15 02:22:50 IST
அட வெட்கம் கெட்ட திருந்தாத ஜென்மங்களா.... தமிழக மக்களே இதை எல்லாம் பார்த்துகிட்டு சும்மா இருக்காதிங்க!!!! முழிச்சுகிங்க......
வன்னியன் - newjersy,யூ.எஸ்.ஏ
2010-10-15 02:09:58 IST
நெசமாவே கேக்கறேன்.... இந்த தாசுக்கு சூடு சொரணையே கெடையாதா...??? இந்த ஆள் பேசாம "மாட்டு" டாக்டர் வேலையே பாக்கலாம்... அந்த ஆள் மட்டும் இல்ல... இந்த கருணாநிதியையும் சொல்லணும்.... எலெக்சன்ல ஜெயிக்கணும் நா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க..... என்னிக்கு இந்த தாசு பய மவன் ஜாதி பெற சொல்லி அரசியல் பண்றதா நிறுத்தரானோ.. அன்னிக்கு தான் உண்மையான அரசியல்வாதி... அது வரைக்கும் அரசியலில் ஒரு வியாதி.......
வன்னியன் - NewJersy,யூ.எஸ்.ஏ
2010-10-15 02:09:07 IST
நெசமாவே கேக்கறேன்.... இந்த தாசுக்கு சூடு சொரணையே கெடையாதா...??? இந்த ஆள் பேசாம "மாட்டு" டாக்டர் வேலையே பாக்கலாம்... அந்த ஆள் மட்டும் இல்ல... இந்த கருணாநிதியையும் சொல்லணும்.... எலெக்சன்ல ஜெயிக்கணும் நா .... என்னிக்கு இந்த தாசு பய மவன் ஜாதி பெற சொல்லி அரசியல் பண்றதா நிறுதரானோ.. அன்னிக்கு தான் உண்மையான அரசியல்வாதி... அது வரைக்கும் அரசியலில் ஒரு வியாதி.......
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-15 01:57:44 IST
உசுரே போகுதே உசுரே போகுதே னு சந்தோசமா ராவணன் பாட்ட பாடிகிட்டு ஆசையா என்னிய தூக்கி வளத்த என் பாட்டிகிட்ட ஓடி போயி பாட்டி பாட்டி நம்ம மாமா மறு படியும் தாத்தாகிட்ட பேச ஆரம்பிச்சிட்டாரு அப்டின்னு சொன்னேன்...நான் சொன்னதும் பாட்டி என்ன நினைச்சிதோ தெரில அப்டியே பல்ல நர நர னு கடிச்சி அந்த நார பய திருந்த மாட்டான் அவன பத்தி என்கிட்டே பேசாத அப்டின்னு கத்த ஆரம்பிச்சிடுச்சி....சரி சரி டென்ஷன் ஆகாம இந்த வருசமாவது மாமனுக்கு உன் ஓட்ட போடு னு சொன்னேன் அதுக்கு நான் மண்டைய போட்டாலும் போடுவேனே தவிர இந்த மானங்கெட்ட டவுசர் தாசுக்கு போட மாட்டேன் இவனுக்கு என் ஓட்ட போடுறதும் ஒன்னுதான் தண்ணி இல்லாத கிணத்துல விழுந்து சாகுறதும் ஒன்னுதான் னு சும்மா பத்ர காளி மாறி கத்தி பயங்கர அளப்பரிய விட்டு புடிச்சி...நான் அந்த இடத்துல அசிங்க பட்டதுதான் மிச்சம்.... சரி என்ன பண்றது மறு படியும் அந்த பாட்ட பாடிகிட்டு அந்த எடத்த விட்டு எஸ்கேப் ஆயிட்டேன்......
வேலு - வேலூர்,இந்தியா
2010-10-15 01:52:23 IST
ஐயா தாசு! இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கெறது எவ்வளவோ மேல். குரங்கு கட்சி கூட கூட்டு சேர்ந்தா மஞ்ச துண்டு மண்ணை கவ்வறது உறுதி தான். விதி யார விட்டது. வீனா போனவங்க கூட கூட்டு வச்சா விளங்காம தான் போகும். நண்பர்களே! ம்ம் START 1.... 2.... 3.......
Michael Coolas - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 01:51:01 IST
ராமதாஸ் யார் ? என்று பத்திரிக்கை நிருபர், நடிகர் விஜகாந்த்திடம் கேட்டபோது - அவர் சொன்னார் 5 வருஷம் வேட்டி துவைப்பார் , 5 வருஷம் சேலை துவைப்பார் அவர்தான் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.... மறுபடியும் 5 வருஷம் வேட்டி துவைப்பார் .......... கே . கைப்புள்ள உங்கள் கருத்தை செல்ல வாருங்கள் .......
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-15 01:35:19 IST
இப்டி எல்லாம் நடக்கும் னு நான் எதிர் பாத்தது தான்...சும்மா சொல்ல கூடாது சைக்கிள் கேப்புல காரியம் சாதிக்கிரதுல உன்னைய மாறி ஒரு மொள்ள மாறிய இந்த உலகத்துலேயே பாக்க முடியாது...எனக்கு வர கோவத்துக்கு அப்டியே உன்ன உன்ன உன்ன கழுத்த நெறிச்சி....வேணாம் வேணாம் இப்ப அவசர பட்டு பின்னாடி என் அக்கா விதவையா ஆகி அலங்கோலமா நிக்கிறத என்னால பாக்க முடியாது...போ உன்னைய தண்ணி தெளிச்சி விட்டுட்டேன் பொழச்சி போ ...எக்கேடாவது கெட்டு நாறி நாசமா போ என் கண்ணு முன்னாடி நிக்காத....அப்டின்னு சொல்லணும் னு தோணுது என்ன பண்றது ஆயிரம் தான் இருந்தாலும் நீ என் மாமனா போய்ட்ட உன்னிய எவ்ளோ அரச்சனை பண்ணுனாலும் நீ ஒரு மானங்கெட்ட ஈத்தர...உனக்கு தான் சூடு சொரணை எதுவுமே கிடையாது அப்டியே காரி மூஞ்சில துப்புனாலும் அத துடச்சிட்டு பாசமா என்கிட்டே பேசுற....சரி சரி உடம்ப பாத்துக்க. உன்னையும் நம்பி உன் பின்னாடி வரானுங்களே, அந்த நார பயலுகள சொல்லணும். அது வரைக்கும் உன் காட்ல மழை தான். நடத்து உன் நாடகத்த.......
கணேஷ் - இந்திய,இந்தியா
2010-10-15 01:22:00 IST
ஐயோ யோ யோ ...................... வட போச்சே .??...
Babu - GrandRapids,யூ.எஸ்.ஏ
2010-10-15 01:08:06 IST
ரொம்ப சரிங்க.. அவர் உடம்ப அவர் பாத்துப்பார்.. உங்க உறவை நீங்க பார்த்துக்கோங்க.. எங்க வேலைய நாங்க காட்றோம். காத்துக் கொண்டிருக்கிறோம் தேர்தலுக்காக.. மனசு வலிக்குதுங்க.. நெஞ்சு பொறுக்குதிலேயே இந்த நிலை கெட்ட மாக்களால்..(என்னை பொறுத்த வரை இவர்கள் மனித இனமே அல்ல)....
மு அமானுல்லா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 01:04:27 IST
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியில் இருந்தாலும் பா.ம.க. ஏறக்குறைய 42% தொகுதிகளில் தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற 58% தொகுதிகளில் பல கூட மயிரிழையில் வென்றது தான். தபால் ஓட்டின் (அரசு ஊழியர்கள்) துணையுடன் வென்றதும் சில தொகுதிகளில் நடந்தது. திமுகவின் உள்ளடி வேலைகளால் தான் பெரும்பாலான தொகுதிகளில் தோற்றதாக பல முறை ராமதாஸ் கூறினார். பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இருந்து முழுமையாக தோற்ற போதும் அவர் திமுக தான் சதி செய்து தங்களை தோற்கடித்ததாக ராமதாஸ் கருணாநிதியின் அப்பாய்ன்மெண்ட் கிடைக்கும் முதல் வினாடி வரை பேசி வந்தார். எனவே கடந்த இரு தேர்தல்களில் இரு கழகங்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தாலும் தோல்வி பழியினை திமுக மீது தான் சுமத்தினார் ராமதாஸ். இதனை கருணாநிதி அரசியல் ஆதாயத்துக்காக மறந்தாலும் திமுகவின் இரண்டாம் மட்ட தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், மக்களும் மறக்கவில்லை. காங்கிரஸீக்கு செக் வைப்பதற்க்காக என எடுத்து கொண்டாலும் ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பது என்பது கருணாநிதிக்கு கொல்லுக்கட்டையை எடுத்து தலையினை சொரிந்த கதை தான். இந்த உண்மையினை வருகிற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தும்....
kavithaipriyan - abudhabi,இந்தியா
2010-10-15 01:04:15 IST
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை மரம் வெட்டி ராமதாசுக்கு சொல்லித்தரவா வேண்டும். அதெல்லாம் சரியாக தான் பிளான் பண்ணுவார். தமிழக மக்களே இனியாவது திருந்துங்கள். நல்லவர்களை அடையாளம் காணுங்கள்...
சௌந்தர் - சென்னை,இந்தியா
2010-10-15 01:02:00 IST
பமாக ,திமுக இரண்டுக்கும் சங்கு ஊத போரங்கோ...
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-15 01:00:50 IST
PART 2.... இந்த அரசியல் பன்றி காய்ச்சல் சனிதாங்கி வன்னிய வாசகர் கடலூர் படையாட்சிக்கு நன்றி உள்ளதாக நடந்து கொண்டதா?அப்போ நாய்க்கு கூட இவரை உதாரணம் சொல்ல முடியாது,,இனி ராமதாஸ் என யாரும் பெயர் வைக்க கூட அஞ்சுவார்கள் இவரின் வெட்கமற்ற நிலையை பார்த்து..இப்படி நினைக்க தோனுகிறது உலகில் இன்றளவும் தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்காத வியாதிகள் பல உள்ளன. அதில் முக்கியமானது எய்ட்ஸ் வியாதி.அது போல அதுவும் தமிழக அரசியலில் தீராத வியாதி இந்த சனிதங்கி ராமதாஸ் ,அது போய் சேர்ந்து இருக்கும் இடம் சகுனி கட்சியான திமுகவிடம்..இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள் அது சரிதான்.கொஞ்சமாவது மஞ்சள் துண்டார்க்கு மூளை இருந்தால் இவரை கூட்டணியில் சேர்த்துக்க கூடாது..எந்த கட்சியும் இந்த சனியை சேர்க்காமால் தனித்து விட்டு இருந்தால் வரும் தேர்தலில் இவர் மண்ணை கவ்வி இவர் கட்சியே இல்லாமால் ஜாதி கோஷம் இல்லாமல் தமிழகம் இருந்து இருக்கும்..பிற ஜாதி வெறி பிடித்த நாதாரிகள் ஜாதி பெயரை சொல்லி வர பயபடுவார்கள்..மீண்டும் திமுக கூட்டணியில் இடம் கொடுத்து ஜாதிக்கு வரவேற்ப்பு கொடுத்தது போல ஆகி விடும் ஐயா மஞ்சள் துண்டாரே யோசியும் வேண்டாம் இவர் உமக்கு... நீங்கள் நிறைய கேடுகள் செய்து விட்டீர்கள் தமிழகத்துக்கு..இந்த சனிதாங்கி ராமதாஸ் நோயை பரப்பும் கிருமி விஷஜந்து,எய்ட்ஸ் போல உயிர்கொல்லி நோய்..உங்கள் கூட்டணியில் சேர்த்து விட்டு ஜாதி என்ற நோயை பரப்பி விடாதிர் உங்களின் வயதான காலத்தில் நல்லது செய்யணும் என நினைத்தால் இந்த சனி தாங்கியை தாங்காதிர்கள்.இவர் கட்சிக்கு முகாந்திரம் முகவரி தராதிர்கள்.....
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-15 00:50:22 IST
இனி கோபாலபுரத்துக்கு போனால் கோவணம் கூட மிஞ்சாது,திமுகவை அழிபதே எனது முதல் வேலை ..,கருணாநிதி வாக்கு கொடுத்து ஏமாற்றி விட்டார்,,பணமா?இனமா?கருணாநிதி வன்னியர்களை டாஸ்மாக் குடிகாரர்களாக மாற்றி விட்டார்...இப்படி எல்லாம்..இன்னும் என்ன என்னமோ பேசி திரிந்த இந்த கேடுகெட்ட மானக்கேடு க்கு மறு பெயர் கொண்ட இந்த பதவி அசிங்கம் சுமக்கும் சனிதாங்கி நீ எல்லாம் ஒரு மனிதனா?எப்படி எல்லாம் ஒரு மனிதன் இருக்க கூடாது என்பதற்கு தமிழக வரலாற்றில் நீ ஒரு சரியான எடுத்துக்காட்டு,மோசமான அரசியல் வியாபாரி..பச்சோந்தி கூட உன்னை பார்த்து வெட்கப்பட்டு தான் இனத்தை அழித்துகொள்ளும்..உன்னை இனி பச்சோந்திகு ஒப்பிட்டு கூட யாரும் பேச முடியாது..அந்த பச்சோந்தி கூட உன்னை பார்த்து காரி துப்பும், சென்னையில் ஓடும் கூவத்தை கூட சுத்தபடுதலாம்,உன்னை சுத்தபடுத்த முடியாது. அரசியல் சாக்கடை என்பார்கள் அது உண்மை தான். உன்னை போல யாரும் வரகூடாது என்பதற்காக சாக்கடை என சொன்னார்களோ என்னவோ..அந்த கூவம் சாக்கடை,பச்சோந்தியை விட மிகவும் கேவலமானவர் இவர். வன்னிய நண்பர்களே இப்போது என்ன சொல்கிறீர்?இவர் என்ன உங்களுக்கு பாதுகாவலரா?....
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-15 00:44:57 IST
அட சீ..சந்தர்ப்பவாத மனுஷங்களா..பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குறீங்க..பென்னாகரம் தேர்தல்ல கூட மாறி மாறி மூஞ்சியில சாணி அடிச்சீங்க..ரெண்டு நாளைக்கு முன்னால கூட திமுகவுக்கு எதிரா குடிதாங்கி காட்டமா கருத்து சொல்லியிருந்தாரு..இப்போ திடீருன்னு ஈயும் பீயுமா ஒட்டிக்கிட்டீங்க..தன்மானம்னு தமிழ்ல ஒரு வார்த்தை இருக்கு..அதுக்கு அர்த்தம் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு வேஷ்டி சட்டை கோமணம் குடும்பம் எல்லாம்.....
ரகுசிவன் - chennai,இந்தியா
2010-10-15 00:43:58 IST
யாருக்கும் வெட்கமில்லை .....நெஞ்சு பொறுக்குதில்லேயே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் ......
muthukumar - kumasi,கானா
2010-10-15 00:33:29 IST
அப்பாடா மானஸ்தனுக்கு பிச்சை போட்டுட்டாங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக