வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஈழத் தமிழர்கள் கைது, 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம்

தமிழ் நாடு சென்னை புறநகர் பகுதியில் தொடராக நடந்து வந்த பல கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க பட்டது . இந்த தனிப்படை போலீசார் நடத்திய இரகசிய தேடுதல் வேட்டையின் போது வசமாக திருடர்கள் மாட்டினர் . மாட்டிய திருடர்களிடமிருந்து237 பவுண் தங்க நகைகள், 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பொலிசார் மீட்டனர்.
இந்த கொள்ளையுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்கம் உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்தனர். 54 வழக்குகளில் திருட்டுபோன ரூ. 1 கோடியே 5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர். அவற்றுள் 237 பவுண் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 8 கார்கள், ரூ 39 இலட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் என்பன அடங்கும்.
இந்த திருட்டு சம்பவத்திற்க்கு தலைமை தாங்கியவர் என கருத்த படும் இலங்கை சேர்ந்த இருவர் சிக்கியுள்ளனர் .இதில் ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் . இவர்கள் அகதிகள் என்று இந்தியாவிட்க்குள் சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக