சனி, 9 அக்டோபர், 2010

கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ்களுக்கு அனுமதிக்கட்டணம் 11இலட்சம் ரூபா

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான வீதி அனுமதிக்கட்டணமாக 11 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையை சேர்ந்த 106 பஸ்கள்   கொழும்பிலிருந்து   யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடுகின்றன.      இவற்றில் சில பஸ்களிடம் இருந்தே வீதி அனுமதிக்   கட்டணம்  தற்போது அறவிடப்படுகின்றது.   எனவே  இனிவரும்  காலங்களில்   அனைத்து  பஸ்களிடமிருந்தும்   அனுமதிக் கட்டணங்கள் அறவிடப்படும்.
யாழ். பஸ் சேவை தொடர்பில்  கடந்தகாலங்களில்  கேள்விப்பத்திரங்கள்  கோரப்பட் டபோது   23 இலட்சம் ரூபாவுக்கும்   கேள்வி பத்திர விண்ணப்பங்கள் கிடைத்தன.
ஆனால் அந்தளவு அறவிட முடியாது என்று நாங்கள் தீர்மானித்ததுடன் 11 இலட்சம் ரூபாவை கட்டணமாக அறவிட முடிவெடுத்தோம். மேலும் எதிர்காலங்களில் அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணங்களிலேயே பஸ்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கும் எண்ணம் அரசாங்கத்திடம் தற்போது இல்லை. எதிர்காலத்தில்  தேவைகள்  ஏற்படின்   கேள்விபத்திரம்   மூலம் முயற்சிக்கலாம்.
நாட்டில் சிறப்பான போக்குவரத்து சேவை ஒன்றை கொண்டு நடாத்த போக்குவரத்துத்துறை ஊழியர்களும் பொது மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். முக்கியமாக பயணிகள் தாம் செலுத்தும் பணத்துக்காக பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.  எனவே பஸ்களில் பயணிகள் பற்றுச்சீட்டுக்களை பெறவேண்டும் என்பதுடன் சிறந்த பஸ் சேவையை உறுதிபடுத்தும் பொருட்டு    நாடளாவிய ரீதியில் பஸ்களில் அறிவித்தல்களை ஒட்டவுள்ளோம்.       மேலும் தனியார் துறையினர் ஊடாக நாட்டில் 18000 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.    போக்குவரத்துச்சபையின் சார்பில் 5200 பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக