வெள்ளி, 17 செப்டம்பர், 2010

MV.Sunsea விவகாரம்; நான்கு பெண்களின் விடுதலைக்கு கனடா இடைக்கால தடை

‘சன் சீ’ கப்பல் மூலம் கனடா சென்ற இலங்கை அகதிகளில் நான்கு பெண்களை தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘சன் சீ’ கப்பலில் சென்ற மூன்று தாய்மார் மற்றும் ஒரு தனிநபர் என நான்கு பெண்களை விடுவிப்பதற்கு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முடிவு செய்திருந்தது. எனினும் கனேடிய அரசாங்கம் சமஷ்டி நீதிமன்றத்தில் இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்குதல் செய்த மனுவொன்றை அடுத்தே இந்த நான்கு பேரினதும் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பின்னிரவு சமஷ்டி நீதிபதி ஒருவர் மூன்று தாய்மாரை விடுவிப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை தொலைபேசி மூலமாக உரிய அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளார். அதேவேளை புதன்கிழமை நண்பகல் வன்கூவர் டவுன்ரண் நீதிமன்ற நீதிபதி மற்றொரு பெண்ணின் விடுதலைக்கான இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என்று கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக