செவ்வாய், 21 செப்டம்பர், 2010

Electra, நயன்தாரா படத்துக்கு தடை!

நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் எலக்ட்ரா-வுக்கு கேரள முன்சீப் கோர்ட் தடை விதித்துள்ளது.

நயன்தாராவின் கடைசிப் படம் என்று அறிவிக்கப்பட்டு தயாராகி வரும் படம் எலக்ட்ரா. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷ்யாமா பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். அவரது பெற்றோர் வேடத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மனீஷா கொய்ராலா நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் படம் ரிலீசாக இருந்தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றம்.

இப்படத்தின் வினியோகஸ்தர் மார்ட்டின் செபாஸ்டீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எலக்ட்ரா படத்தை வெளியிடுவது தொடர்பில் பட தயாரிப்பாளர் விந்த்யனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம். இப்போது அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இதையடுத்து எலக்ட்ரா படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

பிரபு தேவாவை திருமணம் செய்வதற்கு முன் இந்தப் படம் வெளிவர வேண்டும் என்ற வேகத்தில் நயன்தாரா நடித்துக் கொடுத்தார். அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது என்பதால், தனக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறி வந்தார்.
பதிவு செய்தவர்: நயன்தார
பதிவு செய்தது: 21 Sep 2010 1:31 pm
ஐயோ, என் சொத்தெல்லாம் போச்சே, இந்த சொங்கிப்பயளாலே. அடியே ரமலத்தூ, உன் புருஷன் மேலே கேசு போட்டு அவன உள்ள தள்ளி, என்னிய கப்பாத்துடி, உனக்கு புண்ணியமா போவும்.
பதிவு செய்தவர்: தேசிய சிந்தனை
பதிவு செய்தது: 21 Sep 2010 11:41 am
பிரபுதேவா கன்னடத்து குடிமகன் நயன்தார கேரளத்து பைங்கிளி இவர்கள் இருவரும் மணக்கோலத்தில் இணைந்து வாசம் செய்யப்போவது தமிழகத்தில் இதைதான் தேசிய நீரோட்டம் என்பது

பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 21 Sep 2010 10:29 am
இந்த பரதேசிக்கு இனி எல்ல்லாம் தடை தான்.இவு இனிமேல பிரபுதேவா கூட பிச்சை எடுக்கணும் ,அதை நம்ம கண்ணால பார்க்கணும் .

பதிவு செய்தவர்: ரம்லத்
பதிவு செய்தது: 21 Sep 2010 10:22 am
போடு அப்படி. என் வாழ்க்கையை கேடுத்தவலுக்கு தண்டனை.

பதிவு செய்தவர்: மதுரை சந்தோஷ்
பதிவு செய்தது: 21 Sep 2010 10:14 am
ஐயோ பாவம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக