அனிஷா பனீசர் என்ற 16 வயது இந்திய வம்சாவளிப் பெண், அமெரிக்காவின் பர்பக்ட் டீன் என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால் அவர் இங்கிலாந்து பிரஜை என்பதால் இந்தப் பட்டத்தை அவருக்குத் தரக் கூடாது என்று தோல்வி அடைந்த அழகிகளின் பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அனிஷா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் கிளாமர்கானில் உள்ள லங்கான் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கார்டிப்பில் உள்ள ஹோவல்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது விடுமுறை கால வீட்டுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். வந்த இடத்தில் டீன் ஏஜ் அழகிகளுக்கான பர்பக்ட் டீன் அழகிப் போட்டி குறித்து கேள்விப்பட்டு அதில் கலந்து கொண்டார்.
இதில், அமெரிக்காவில் பிரபலமான பல்வேறு டீன் ஏஜ் அழகிகள் 30 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அத்தனை பேரையும் தனது அசத்தல் அழகு மற்றும் அறிவால் தோற்கடித்து விட்டார் அனிஷா.
இதையடுத்து அவருக்கு 2000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது.
ஆனால் அனிஷாவுக்கு பட்டத்தைக் கொடுத்ததற்கு தோல்வி அடைந்த அழகிகளும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்கு எப்படி அமெரிக்க அழகிப் போட்டி பரிசைத் தரலாம் என்று அவர்கள் முறையிட்டனர்.
ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனிஷா. இதெல்லாம் பொறாமையால் வரும் வார்த்தைகள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக வெற்றி பெற்ற என்னை வி்மர்சிப்பது தவறு என்றார் படு கூலாக.
அனிஷாவுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தில் பயிற்சி பெறவும் இந்தப் போட்டி மூலம் 18,000 டாலர் ஸ்காலர்ஷிப் தொகையும் கிடைத்தது. மேலும் தனியாகவும் ஒரு டிவி நிகழ்ச்சியை அவர் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக