ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Delhi 2010.கட்டிலில் உட்கார்ந்தவுடன் அது உடைந்து விட்டதாம்.

காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜில் உள்ள அறைகள் மற்றும் அதன் அடிப்படை வசதிகள் பல்லைக் காட்டத் தொடங்கி விட்டன. குத்துச் சண்டை வீரர் அகில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று கட்டிலில் உட்கார்ந்தவுடன் அது உடைந்து விட்டதாம்.

இந்திய அணியினர் கேம்ஸ் வில்லேஜை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். குத்துச் சண்டை வீரர் அகில் குமார், தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுள்ளார். அங்கு போய் சற்று நேரம் உட்காருவோமே என்று நினைத்து கட்டிலில் உட்கார்ந்தார். அவ்வுளவுதான், அடுத்த விநாடியே கட்டில் மேல் பகுதி புட்டுக் கொண்டு விட்டதாம்.

அதிர்ஷ்டவசமாக அகிலுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ஒலிம்பிக் பவனுக்கு நாங்கள் போய் அக்ரடிடிஷன் கார்டுகளைப் பெற்றுக் கொண்டு கேம்ஸ் வில்லேஜ் திரும்பினோம். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் போய் சற்று இளைப்பாறலாமே என்று நினைத்து கட்டிலில் உட்கார்ந்தேன். அடுத்த விநாடியே அது உடைந்து விட்டது.

இதையடுத்து படுக்கையை நான் சோதித்தேன். அப்போதுதான் கட்டிலில் போடப்பட்டிருந்த பிளைவுட் சில பகுதிகளில் போடப்படவே இல்லை என்று தெரிந்தது. இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு ஓய்வெடுக்க நினைத்தபோது இப்படியாகி விட்டதே என்று வேதனைப்பட்டேன்.

போட்டிகளில் பங்கேற்கும் டென்ஷனில் உள்ள வீரர், வீராங்கனைளுக்கு நல்ல ஓய்வும், வசதிகளும் தேவைப்படும் நிலையில் இப்படிப்பட்ட வசதி வருத்தம் தருகிறது. டாய்லெட்களும் கூட சுத்தமாகவே இல்லை என்றார் வேதனையுடன்.

முன்னதாக பத்து பேர் கொண்ட இந்திய குத்துச் சண்டை அணியினரை கேம்ஸ் வில்லேஜுக்குக் கூட்டிச் செல்ல உரிய பஸ் வராததால் அவர்கள் ஒலிம்பிக் பவனிலேயே கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்துக் கிடந்த அவலமும் இன்று நடந்தேறியது.

இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் நடக்கப் போகிறதோ...!
பதிவு செய்தவர்: sen
பதிவு செய்தது: 26 Sep 2010 6:15 pm
நம்ப தலைவர் மாதிரி, செட் போட்டு ஓபன் பண்ணுங்கப்பா.. போட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் திரும்ப மாத்தி கட்டிக்கலாம் ,,,,,,, அதான் நம்ப தோட்டாதரணி இருகாருல்லா....என்னதான் இருந்தாலும் நம்ப தலைவருக்கு இருக்குற அறிவு யாருக்கும் இல்ல .. எப்டி நாங்க தலைமை செயலகம் ஓபன் பண்ணினோம்!? . . . .

பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 26 Sep 2010 6:10 pm
மணி சங்கர ஐயர் நாலு மாசத்துக்கு முன்னாலே சொன்னபோது, அவனை வாயை மூடச் சொல்லிவிட்ட காங்கிரசின் கையாலாகத்தனத்தை இது காட்டுகிறது. காங்கிரஸ்காரன் கல்மாடி மற்றும் கமிட்டியில் இடம்ப்ற்றுள்ள இதர காங்கிரச்காரன்களக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட அக்கரையில் ஒரு சிறிதாவது, இந்தப்போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நினைப்பு சிறிதளவாவது இருந்திருந்தால் உலக அரங்கில் நாம் கேவலப்பட்டு நகைபுக்குரியவர்கள் ஆக்கப் பட்டிருக்கமாட்டோம். காங்கிரஸ் என்றாலே கூட்டுக் கொள்ளை, ஏமாற்றுதல், பித்தலாட்டம் என்று ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக