ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

Broadband in tamil nadu தமிழ்நாட்டில் முதல்முறையாக புதிய அகண்ட அலைவரிசை

தமிழ்நாட்டில் முதல்முறையாக புதிய அகண்ட அலைவரிசை நிறுவனம்

கோவை சாயிபாபாகாலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் `ஆத்மா அகண்ட அலைவரிசை இணைப்பு(பிராட்பாண்ட் கனெக்ஷன்) நிறுவன தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு, ஆத்மா அகண்ட அலைவரிசை இணைப்பு நிறுவனர் ஆத்மா சிவக்குமார் தலைமை தாங்கி, கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
விழாவுக்கு முன்னாள் தமிழக நிதி அமைச்சர் சி.பொன்னையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிராட்பாண்ட் நிறுவனத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றினார். 
இந்த ஆத்மா அகண்ட அலைவரிசை நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக நிறுவனர் ஆத்மா சிவக்குமார்,
’’கோவையில் உள்ள ஏ.பி.சி. நிறுவனம், பெங்களூரில் உள்ள நியோன் டெக் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் இன்று(நேற்று) ஆத்மா அகண்ட அலைவரிசை நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த அகண்ட அலைவரிசை `டிரிபிள் பிளே' என்ற 3 வகையான சிறப்பு அம்சங்களை கொண்டது.
இந்த அலைவரிசையை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கு வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் போன் மூலம் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக பேசி பயன் அடையலாம். வெளிநாடுகளுக்கு பேசும் போது, அந்தநாட்டின் உள்ளூர் அழைப்பு கட்டணம் எவ்வளவோ? அந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
வீடியோ இண்டெர்நெட்டில், உரிமம் மற்றும் அனுமதி பெற்ற அனைத்து மொழி சினிமா மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் வெளியிடப்படும்.
இந்த அலைவரிசையை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து பார்க்கலாம்.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள், கல்வி தகவல்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தரும் உள்ளன. இந்த புதிய அகண்ட அலைவரிசை இணைப்பை பெற்று அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக