ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நித்தி கனகரத்தினம் எம். ஜி. ஆர். மது ஒழிப்பு திட்டத்திற்கு எனது பாடலை பயன்படுத்தி வருவது எனக்குத் தெரிந்தது

யாழ். மத்திய கல்லூரியில் படிக்கும்போது எனக்குள் இசையார்வம் அதிகமாக இருந்தது. தேவதாஸ் படப் பாடல்களை நான் அதிகமாக பாடித்திரிந்துகொண்டிருந்த காலமது.
எங்கள் பள்ளியில் மிஸ் தோமஸ்தான் பியானோ வாசிக்க கற்று கொடுத்தார். ஒரு முறை யாழ். சென்ட்ரல் கல்லூரியில் நடத்த கிரிக்கெட் போட்டியைப் பார்க்கப் போனப்போது அங்கே சில சிங்கள வாலிபர்கள் கிட்டாரை இசைத்துக்கொண்டு பைலாப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதில் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. பிறகு பாடசாலைக்கு சென்ற நானும் நண்பர் கதிரேசனும் பள்ளி வளாகத்தில் பைலாப் பாடல்களை பாடி ஆடிக்கொண்டிருந்தோம். அதைக் கவனித்த மிஸ் தோமஸ் எங்களை அழைத்து இதை நீங்கள் மேடையில் ஆடிப் பாடினால் என்ன?’ என்று கேட்க நாங்களும் சம்மதித்து பள் ளியில் நடத்த ஒரு விழாவில் பாடி ஆடினோம். எனக்குள் ஒரு பொப்பிசை பாடகன் உருவாக அந்த சம்பவம் தான் காரணமாக இருந்தது. அதற்கு பிறகு ஒரு பொப்பிசை குழுவை நான் ஆரம்பித்தேன். வேலை ஏதும் இல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. இசைக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும் என் நண்பர்களும் யோசித்தபோது எனது நண்பர் சூரியபாலா, ‘நாங்கள் சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டு காலம் கடத்திக்கொண் டிருப்பதால் நாம் அனைவருமே நடைப் பிணங்கள் தான். எனவே,
இலங்கையின் முதலாவது தமிழ் பொப்பிசை பாடல்களை உருவாக்கிய பெருமை எங்களுக்கே உண்டு. அதனால்தான் பொப்பிசை பிதா என்ற சிறப்புப் பட்டமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் நித்தி, தமது பொப்பிசைப் பாடல்கள் உலகமெங்கும் சக்கைப்போடு போட்ட கதையையும் பகிர்ந்து கொண்டார்.
நான் பாடிய ‘சின்ன மாமியே...’, ‘கள்ளுக் கடை பக்கம் போகாதே...’ என்ற பாடல்கள்தான் என்னை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது. தமிழ் நாட்டில் எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த போது அவர் கொண்டு வந்த ‘மது ஒழிப்பு’ திட்டத்திற்கு எனது ‘கள்ளுக் கடைப் பக்கம் போகாதே...’ என்ற பாடலைத்தான் விளம்பர குறியிசைப் பாடலாக வைத்துக் கொண்டாராம். ஒருமுறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த நடிகர் ஜெய்சங்கர் எங்கள் முதலமைச்சரே பொதுமேடைகளில் உங்களின் பாடலைத்தான் ஐயா பாடுறாரு என்று என்னிடம் சொன்னார். அப்போதுதான் எம். ஜி. ஆர். மது ஒழிப்பு திட்டத்திற்கு எனது பாடலை பயன்படுத்தி வருவது எனக்குத் தெரிந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், எம். ஜி. ஆர். காலத்திலிருந்து இன்று வரை எனது பாடல்களை எத்தனையோ பேர் என் அனுமதியின்றியே பயன்படுத்தி பெயர் வாங்கியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தத்தான். சரி, பயன்படுத்தியதே பயன்படுத்தியாயிற்று, குறைந்த பட்சம் எனக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையைக் கூட சொல்லவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். அண்மையில் வெளியான பந்தயம் படத்தில் ‘சின்னமாமி’ பாடலை விஜய் அண்டனி ரீமிக்ஸ் பாடலாக மாற்றியமைத்திருக்கிறார். அதற்கு முன்பு தேவா படத்தில் மன்சூர் அலிகானும், மணிவண்ணனும் பாடுவது போல ஒரு பாடல் ‘சொல்லுங்க மருமகனே...’ என்ற எனது பாடலின் சில வரிகளை மாற்றி அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள் ‘கண்டேன் சீதை’யை படத்தில் விவேக் பாடும் பாடல் காட்சியில் அமெரிக்காவில் மாப்பிள்ளைன்னா பொண்ணு கேட்கிறாங்க...’ என்ற பாடல் வரும். அந்தப் பாடலை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பாகவே நான் லண்டனில் மாப்பிள்ளைன்னா பொண்ணு கேட்கிறாங்க... என்று எழுதிப் பாடினேன். இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்று புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில் கலைஞர் டிவியும், மக்கள் தொலைக்காட்சியும் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கி என்னை மனம் திறந்து பேச வைத்தார்கள். நண்பர் ஹமீதும் கலைஞர் டி.வியின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் என்னை கெளரவித்ததோடு நான் பாடிய சில பாடல்களை ஒளிபரப்பி என் முகத்தை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தார்...’ என்று தனது இசைப் பயணத்தின் சில சம்பவங்களை எம்மிடம் பகிர்ந்து கொண்ட நித்தியிடம், காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.
please click www.sooddram.com for full story 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக