திங்கள், 13 செப்டம்பர், 2010

பழங்கால ஓவியங்கள் திருட்டு: கோவில் குருக்கள் கைது

வேதாரண்யம் ஏரிக்கரையில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுபாட்டிலும், வேதாரண்யேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழும் இக்கோவில் இயங்கி வருகிறது.

இந்த கோயிலில் பழமை வாய்ந்த தங்க வேலைப்பாடுடன் கூடிய நடராஜர் படம்-1, அப்பர், சம்மந்தர் இரண்டும் சேர்ந்த படம், சுந்தரர், மாணிக்கவாசகர் சேர்ந்த மற்றொரு படம் ஆகிய மூன்று படங்கள் இருந்தது.  இவை சுமார் 3 அடி உயரம் உடையவை ஆகும்.
இந்த படங்கள் காணாமல் போய் விட்டதாக வேதாரண்யம் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து அவர் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் நடராஜன் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், தனுக்கொடி ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் சப் இன்ஸ்பெக்டர் தனிக்கொடி தலைமையில் தனிப்படை அமைக்க பட்டது. திருட்டு சம்மந்தமாக கோயில் நிர்வாகம் கோயில் குருக்கள் முத்துசெல்வன் (32) என்பவரை தற்கால பணிநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் குருக்கள் முத்துசெல்வத்தையும், அகஸ்த்தியன்பள்ளி கோவிந்தராஜ் (63) என்பவரையும் கைது செய்து கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

கோயில் குருக்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மாற்று குருக்கள் நியமனம் செய்வதில் காலதாமதம் ஆவதால் அந்த கோவிலில் பூஜைகள் தடைப்பட்டுள்ளன. இன்றுடன்  3 நாட்களாக கோவில் பூட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் பூஜை நடைபெறாமல் உள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக