புதன், 29 செப்டம்பர், 2010

யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு!

யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டு, தமது சொத்துக்களை இழந்து, இடம்பெயர்ந்த 250 பேருக்கு நஷ்டஈடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நஷ்டஈட்டை பெற்றுக் கொள்வதாயின் விண்ணப்பதாரி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டும்.

கிராம சேவையாளரிடம் தம்மைப் பதிவு செய்திருக்க வேண்டும். இவரது விண்ணப்பத்தை மாவட்ட செயலகம் அங்கீகரிக்கவும் வேண்டும்.முன்னர் எந்த நட்ட ஈட்டையும் பெறாதவராக விண்ணப்பதாரி இருக்க வேண்டும் என புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் ஈ.ஏ எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தால் சொத்துக்களை இழந்து பாரியளவில் பாதிக்கப்பட்டோருக்கு பத்து லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக