கொழும்பு வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் இன்னமும் வீடு திரும்பவில்லை என்றும் அவர் தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். வெள்ளவத்தையில் புதிதாக வர்த்தக நிலையமொன்றை ஆரம்பித்திருந்த கிருஷ்ணதாஸ் (வயது 27) என்ற வர்த்தகர், விகார ஒழுங்கையில் வைத்து வெள்ளை வேனில் வந்தோரால் நேற்றுக் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் எதற்காக கடத்தப்பட்டார் என்ற விபரமும் தெரியவில்லை என்றும் வர்த்தக நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொறுப்பதிகாரி எஸ்.சிறியந்தவிடம் வினாவியபோது, "வர்த்தகர் கப்பம் கோருவதற்காகக் கடத்தப்பட்டாரா அல்லது தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதுவரை எதுவித தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை. விசாரணைகள் முடிவடைந்ததும் தகவல் தரலாம் எனக் கூறினார்.
இடுகையிட்டது ATHIRADY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக