வியாழன், 30 செப்டம்பர், 2010

தமிழ் மக்கள் புலிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்

உச்சகட்ட நெருக்கடிகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன் சொந்த ஊரான இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன். ‘எரியும்  நினைவுகள்’, ‘முல்லைத்தீவு’ போன்ற தன் படங்களின் மூலம் ஈழ மக்களின் கண்ணீரை உலக அரங்கில் காட்சிப்படுத்தியவர்
நெருக்கடியான நிலையில் இவரின் செயல் பாட்டைக் கண்காணித்து வந்த இலங்கை அரசாங்கம் இவரை நாட்டிற்குள் அனுமதிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை மீறிச் சென்ற சோமீதரன் அனுபவம் எப்படி  இருந்தது? அவரிடம் பேசினோம்
‘‘வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் என்று நிறைய இடங்களுக்குப் போனேன். கிழக்கு மாகாணம் முழுக்க என்னால் எந்தவித அச்சமும் இன்றி புகுந்து  வர முடிந்தது. இதோடு மகிந்தாவின் சொந்த மாவட்டமான அமாந்த் தோட்டை,மாத்தரை,களீ போன்ற சிங்களப்பகுதிகளையும் முழுமையாக சுற்றிப் பார்த்தேன்.நான்  பிறந்ததிலிருந்து போக முடியாமல் இருந்த பகுதிக்குக்கூட இந்த முறை பயணத்தில் போக முடிந்தது. கெடுபிடிகள் இல்லாமல் சுற்றவும் முடிந்தது.
நிறைய தமிழ் மக்கள் புலிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வன்னிப் பகுதியில் பெரும் பகுதி பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.ஒரு சிலர் பிரபாகரன் இறந்ததை உண்மை என்றும் பெரும் பகுதி வன்னி மக்கள் பிரபாகரன் சாகவில்லை என்றும் இப்போதும் நம்புகிறார்கள்.

ஒரு ஈழப் போராளியை நான் சந்தித்தேன். அவரிடம், திரும்ப ஆயுதப் போராட்டம் சாத்தியமா? என்றேன். அதற்கு அவர், ‘‘நாங்கள் இப்போது நோஞ்சான்களாக இருக்கிறோம்.எங்கள் உடலுக்கு முதலில் சக்தி தேவைப்படுகிறது,அதுவே கிடைக்காத போது ஆயுதம் ஏந்துவது நடக்கின்ற காரியமா? எங்களுக்கு கிளிநொச்சி வீழ்ந் தபோதே தெரியும், நாங்கள் தோல்வியை சந்தித்து, அழிவைக் காண நேரிடும் என்று. இனி ஆயுதப் போராட்டம் தழைக்கலாம். இல்லாமலும் போகலாம்.அதற்கு பதில்  சொல்ல இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் பிடிக்கும்’’ என்றார். இவரது மனநிலைதான் பெரும்பாலான தமிழ் மக்களின் இன்றைய மனநிலையாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக