திங்கள், 20 செப்டம்பர், 2010

கூழும் சிறுவெங்காயமும் தான் காலை டிபன்

சினிமா நட்சத்திரங்கள் என்றால், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் ஆர்டர் செய்த உணவு வகைகளை ஒரு வெட்டு வெட்டுவார்கள். ஆனால், தினமும் காலையில் கேழ்வரகு கூழ், மோர் மிளகாய், மணத்தக்காளி கீரை கூட்டு, சிறுவெங்காயம், பச்சை மிளகாய் சகிதம், ஒரு படப்பிடிப்பில் வித்தியாசமாக சாப்பிடுகிறார்கள். ராசு மதுரவன் இயக்கும் ‘முத்துக்கு முத்தாக’ பட ஷூட்டிங்கில்தான் இப்படி. இப்படத்தின் ஷூட்டிங் மதுரை, திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் நடந்து வருகிறது. கிராமத்திலுள்ள குறுகலான தெருக்கள், முட்டுச்சந்துகள், வயல்வெளிகளில் எல்லாம் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தினமும் காலையில் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு குளிர்ச்சியான கேழ்வரகு கூழ் பரிமாறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக