திங்கள், 20 செப்டம்பர், 2010

1600 கோடியில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் திறக்கும் லீலா குழுமம்!

ரூ 1600 கோடி செலவில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டலை டெல்லியில் திறக்கிறது லீலா குழுமம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், புதுடெல்லியின் பிரதான பகுதியான சாணக்கியாபுரியில் இந்த ஹோட்டலுக்காக 3 ஏக்கர் நிலம் வாங்கியது இந்த நிறுவனம். அப்போது அதன் விலை ரூ 700 கோடி!

பின்னர் ரூ.900 கோடியில் ஹோட்டல் மிகப் பிரமாண்டமாக சொகுசு ஹோட்டல் கட்டப்பட்டது. ஆக மொத்தம் ரூ 1600 கோடியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

260 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் ஒரு அறைக்கு சுமார் ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்புடன் சேர்த்து இந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை பொதுவாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றுக்கு சராசரியாக ரூ.1.5 கோடி வரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

ஓபராய், தாஜ், மௌரியா, இம்பீரியல் மற்றும் ஹயாத் போன்றவற்றையும் மிஞ்சும் அளவுக்கு லீலா குழுமத்தின் இந்த புதிய ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ஹோட்டலில் தங்குவதற்கான ஒரு நாள் வாடகை ரூ.22,000த்துக்கும் அதிகமாக இருக்கும். ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு 12 சதவீத லாபம் வரவேண்டுமென்றால், இந்த அளவுக்கு வாடகை நிர்ணயம் செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளது லீலா குழுமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக