செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நந்திதா தாஸ் இயக்கும் 'விவகார' கதை!

புத்திஜீவி நடிகை [^] என்று பெயரெடுத்த (இந்தப் பெயரை வாங்கத்தான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!) அழகி பட புகழ் நந்திதா தாஸ், இப்போது விபச்சார தொழிலில் ஈடுபடும் பெண்களின் கதையை திரைப்படமாக்குகிறார்.

தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். நடிப்பு தவிர திரைப்பட இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

குஜராத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய 'பிராக்' என்ற படம் [^], 2002-ம் ஆண்டு வெளியானது. பல நாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. நைஜீரியா, உக்ரைன் திரைப்பட விழாக்களில் சிறப்பு விருதுகளைப் பெற்றது. பின்னர் கல்யாணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார் நந்திதா.

இப்போது, 'பிராப்பிங்க்' என்ற படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் மூன்று பெண்களை பற்றிய கதை இது. விரைவில் படப்பிடிப்பு [^] துவங்கிறது.
பதிவு செய்தவர்: ஒரு உண்மை
பதிவு செய்தது: 14 Sep 2010 6:30 pm
கருப்பாயிருந்தாலும் நந்திதா மாதிரி ஒரு அழகான பெண்ணை நான் இது வரை பார்த்ததில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக