செவ்வாய், 14 செப்டம்பர், 2010

2வது இடத்துக்கு காங்., முயற்சி : தங்கபாலு சூசகம்

திருச்சி: ""தமிழகத்தில் காங்கிரஸ் தனது இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முந்த வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதையே கட்சித் தலைமையும் விரும்புகிறது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

திருச்சியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்கும் கட்சியின் 125வது ஆண்டு விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர், ஆதரவாளர்களுடன் கட்சியில் இணையும் விழா நடக்கிறது. சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவு நிகழ்ச்சி, விருதுநகரில் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரையில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் பொதுக்கூட்டம், கோவையில் முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் நினைவு சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி நடத்தியுள்ளது. அவ்வகையில் திருச்சியில் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மத்தியமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், சிதம்பரம், வாசன், முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள் மற்றும் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ள இடத்தை பார்வையிட வந்துள்ளோம்.

எனக்கு காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டு கால அனுபவம் உண்டு. சோனியாவின் தலைமையில் நாடு முழுவதும் கட்சி எழுச்சி பெறுகிறது. அதில், தமிழகமும் இணைய வேண்டும். நான் உட்கட்சி பூசல் பற்றி வெளியில் பேச மாட்டேன். அவ்வாறு பேசுவதை நாகரீகமாக கருத மாட்டேன். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகம் மிகுந்த பயன்பெறுகிறது. தேர்தல் கூட்டணி குறித்து தற்போது பேசுவது மரபல்ல. நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு செயல்பாடும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 20 சதவீதம் ஓட்டு வங்கி பெற்றுள்ள மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் கட்சியாக உள்ளது; தனது இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முந்த வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதையே கட்சித் தலைமையும் விரும்புகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம். தேர்தல் நேரத்தில், ஆட்சியில் பங்கு, அதுகுறித்து தொண்டர்களின் எண்ணம், விருப்பம் உள்ளிட்டவை குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி தலைவர்கள் கூட்டம் நடத்தி கட்சி செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

லட்சக்கணக்கானோர் இணையும் விழா: முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் கூறுகையில், ""காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் ராகுல், முன்னணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, நான் மட்டும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தேன். கடந்த 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில், என்னுடன் உள்ள தொண்டர்களும், இணைவதுக்கு விழா நடத்த சோனியாவிடம் அனுமதி கேட்டிருந்தேன். பல்வேறு சூழ்நிலை காரணமாக, அக்டோபர் ஒன்பதாம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணைப்பு விழாவுக்கு அனுமதி கொடுத்துள்ளார். இதற்கு சோனியாவுக் நன்றி. கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் காங்கிரஸ் இணைகின்றனர்,'' என்றார்.
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-14 06:36:11 IST
இளங்கோவன் முதல்வர் பதவி வேண்டும் என்கிறார். இவரோ இரண்டாவது இடத்திற்கு முயற்சி செய்யவேண்டும் என்கிறார். கனவுதானே, சும்மா அதிகமாக கனவு காணவேண்டியதுதானே? கனவு காணவே இப்படி பயந்தால்? முதல்வர் ஒன்றும் சொல்லமாட்டார்....
இராமச்சந்திரன் - வெர்ஜினியா,யூ.எஸ்.ஏ
2010-09-14 04:56:59 IST
1 ) இப்போதுள்ள காங்கிரசுக்கும், சுதந்திர போராட்ட தியாகிகள், கக்கன், காமராஜ் போன்றோர்களுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை...==== 2 ) தமிழகத்தில் காங்கிரசுக்கு 10 சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலாகத்தான் ஓட்டு பலம் உள்ளது.=== 3 ) திருநாவுக்கரசு காங்கிரசில் இணைவதால் காங்கிரசுக்கு பெரிய லாபம் ஏதும் இருக்காது...வேண்டுமானால் அறந்தாங்கி தொகுதியில் அவர் தனிப்பட்ட செல்வாக்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவினால் அவர் மட்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் காங்கிரசில் இன்னொரு கோஷ்டி இவர் தலைமையில் உருவாக ஒரு வாய்ப்பு உள்ளது.==== 4 ) தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி இவர்கள் இங்கிருந்து இத்தாலிக்கு சொல்லி அங்கிருந்து பதில் முடிவு வருவதற்குள் சத்தியமூர்த்தி பவனில் ஒரு கலாட்டா, பல வேட்டி கிழிப்புடன் தேர்தலும் முடிந்து விடும்....
பார்த்திபன் - சென்னை,இந்தியா
2010-09-14 03:08:13 IST
ஆசை தோசை அப்பளம் வடை!...
Govind - SA,இந்தியா
2010-09-14 02:25:02 IST
இவரு ஆசைபடரதே ரெண்டாவது இடத்துக்கு ..எங்க போய் நிக்க போறாரோ ? தங்கபாலு தூக்கத்திலிருந்து எழுந்திருங்க ..நேத்து இளங்கோவன் சொன்ன பிறகு தான் நீங்க தலைவர்ங்கிறதே பாதிபேருக்கு தெரியும்..மு க கோவ்சிக்க போராரே அப்பட்டின்னு ரெண்டாவது இடத்துக்கு போயிட்டீங்க....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-14 02:11:08 IST
தொங்கபாலு, சாரி, எண்ண மன்னிச்சுக்கோ. இன்னிக்கு கருத்து சொல்றதுக்கு வேற யாருமே கிடைக்கல. அதனாலதான் மீண்டும் மீண்டும் உனக்கெல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு என்னோட நெலமை மோசமா போச்சு. ஏம்ப்பா தினமலர் நிருபர்களே, நீங்க இவளோ பேரு இருக்காங்களே. காரசாரமா ஒரு ராமதாசு, ஒரு செங்கண்ணன், ஒரு இளங்கோவன், ஒரு கிச்சுன மூத்தி, தொல் திருமா, தொங்கி போன கருமா. இவங்க யாருமே ஒன்னும் அறிக்கை கிறிக்கை எல்லாம் விடலியா? முதல் பக்கம் பூரா வெறும் சப்ப நியுசா போட்டு இருக்கீங்க. உங்கனால இன்னிக்கு என்னோட டே வே போச்சு. சும்மா ராமதாஸ்க்கு ஒரு போன் போட்டு கூட்டணில சேத்துக்க மாட்டோம்ன்னு ஒரு நியுஸ் வந்திச்சு உண்மையா? ன்னு ஒரு பிட்ட போட்டு விடுங்க. அப்புறம் பாருங்க நாள் எப்படி அமோகமா போவுதுன்னு. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு நான் சொன்னமாறி சூடான நியுஸ் எதாச்சும் போடுங்க ப்ளீஸ்....
கலைச்செல்வன் - பால்டிமோர்யுஎஸ்ஏ,இந்தியா
2010-09-14 01:55:15 IST
தங்கபாலு அவர்களே! காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள உங்கள் பொறுப்பும்,கடமையும்,உங்கள் அறிக்கையில் நன்கு புலப்படுகிறது.இரண்டாவது இடத்துக்கு வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதில் தவறொன்றுமில்லை,ஆனால் உங்கள்,கட்சிக்கு வேலைசெய்ய தொண்டர்களும் வாக்களிக்க வாக்காளர்களும் வேண்டுமே!!!?. இளங்கோ வனைப் போன்ற ஒருசில தறுதலைத் தலைவர்கள்!மட்டும் தானே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்.அவர்களோ அரை குறையாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் காங்கிரசை புதை குழிக்கு அனுப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.முதலில் இளங்கோவனைப் போன்ற புல்லுருவிகளை உங்கள் கட்சியிலிருந்து நீக்கினால்தான், கட்சியையே காப்பாற்ற முடியும்.தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு நிலவரம் இதுதான்.திமுக,அதிமுக,தேமுதிக,மதிமுக.பாமக விடுதலைசிறுத்தைகள்,காங்கிரஸ்,கம்யூ(இ), கம்யூ(வ),பிற சில்லரைக்கட்சிகள்........இதுதான் கசப்பான உண்மை.இந்த லட்சணத்தில் எப்படி இரண்டாமிடத்துக்கு வரமுடியும்? கொஞ்சம் யதார்த்தமாக ஆசைப்படுங்கள்!.ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க குறைந்த பட்சம் இரண்டு கால்களும் நல்லநிலையில் செயல்பட வேண்டும்.ஆனால் காலேவிளங்காத முடவனால் எப்படி ஓடமுடியும்?எப்படி ஜெயிக்க முடியும்? சிந்தியுங்கள் ப்ளீஸ் .............
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-14 01:36:09 IST
எய்ம் பண்ணும்போதே, ஏதோ ஒரு ரெண்டாவது இடம் கெடச்சா கூட போதும்ன்னு நினைக்கிற அளவுக்கு சவலத்தனமா ஒரு தலைவர். நேத்து தூங்குறப்போ கட்சி ஆரம்பிச்ச கரட்டான்டிங்க கூட வர தேர்தலில் ஆட்சிய புடிப்போம்ன்னு முழங்கிட்டு இருக்கிறப்போ, ஒரு அகில இந்திய கட்சியோட தலைவர் பேசுற பேச்ச பாத்தீங்களா? ஏம்பா, நினைக்கிறப்போ கூட பெரிசா எதுவும் நினைக்க தெரியாத இந்த ஆளையெல்லாம் வெச்சுக்கிட்டு காங்கிரஸ் உருப்பட போவுதா? இவரு வந்ததுக்கு அப்புறம்தான் காங்கிரஸ் ஒரு சிரிப்பு கட்சி, ஒரு ஜால்ரா கட்சிங்கிற எண்ணமே வந்தது எனக்கு....
கிள்ளிவளவன் - சென்னை,இந்தியா
2010-09-14 01:16:31 IST
தங்கபாலு..... லட்சதிற்கு எவ்வளவு பூச்சியம் என்று தெரியுமா? உனக்கு இளங்கோவன் அடித்த வேப்பிலை நல்லா வேலை செய்யுதுயா...!! நீ தனியா நின்று மருத்துவர் ஐய்யா கட்சியைவிட ஒட்டு அதிகமா வாங்கிக்காட்டு பார்க்கலாம்..!...
karthik - chennai,இந்தியா
2010-09-14 01:00:11 IST
தங்கபாலு இளங்கோவன் இரண்டுபேரும் காங்கிரசை வளர்க்கமாட்டார்கள். தயவு செய்து இருவரையும் எந்த பதவியும் கொடுக்காதே...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-14 00:29:29 IST
நான் எதையுமே வெளில பேசமாட்டேன். கட்சி தலைமை விரும்புது. கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து தற்போது பேசுவது மரபல்ல. இப்படி கொஞ்சம் கூட சக்தி இல்லாத, சுயமா ஒரு வார்த்தை, ஒரு ஐடியா எதுவுமே இல்லாத உங்களமாறி ஆளவெச்சுக்கிட்டு காங்கிரஸ் சப்பாணியா இருக்க முடியுமே தவிர, தவழ்ந்து தவழ்ந்து கூட அடுத்த இடத்துக்கு போக முடியாது. இருக்கிறதுலேயே ஒரு செயல்பாடற்ற தலைவர்னா அது நீங்கதான். கேவலம் ஒரு லெட்டர் பேட் கட்சி தலைவனுக்கு உள்ள கெத்து கூட உங்களுக்கு கிடையாது. இன்னும் ஒரு வருஷம் நீங்க இருந்தா போதும், பேசாம காங்கிரச ஆளும்கட்சிக்கு அடகு வெச்சிட்டு போய்ட வேண்டியதுதான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக