ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கரடியனாறு அனர்த்தத்திற்கு மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
பஸ் நிலையம், பொலிஸ் நிலையம் வர்த்தக நிலையங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் வீதிகள் வெறிச்சோடிக் கணப்பட்டடிருந்தது.
கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக