செவ்வாய், 14 செப்டம்பர், 2010

பார்வதி அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார் நெடுமாறனின்

வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயர் பார்வதி அம்மாளை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தூதர் ராமசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

பார்வதி அம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது மெதுவாக தேறி வருகிறார்.

அவரை உறவினரான சிவாஜிலிங்கம் கவனித்துக் கொள்கிறார். தினசரி பலரும் பார்வதி அம்மாளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிங்களர்கள் பலரும் வந்து பார்த்து, காலில் விழுந்து வணங்கிச் செல்கின்றனராம்.

ந்த நிலையில், பார்வதி அம்மாளை உலகத்தமிழர் பேரவை செயலாளரான ராமசாமி பத்மநாபன் நெடுமாறனின் பிரதிநிதியாக வல்வெட்டித்துறைக்கு சென்று பார்வதி அம்மாளை சந்தித்தார். அவரிடம் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார். சிவாஜிலிங்கத்தையும் அவர் சந்தித்துப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக