செவ்வாய், 14 செப்டம்பர், 2010

2020ம் ஆண்டிற்குள் மும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை

2020ம் ஆண்டிற்குள் மும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை உருவாக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நவீன தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டினூடாக இந்த எதிர்பார்ப்பினை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சியை மேம்படுத்தும் செயற்பாடுகளில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இத்துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தொலைத்தொடர்பு மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. 17ம் திகதி வரை நடைபெறவுள்ள மேற்படி மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக