புதன், 15 செப்டம்பர், 2010

ஊர்காவற்றுறை,கடலில் பெண்களுடன் சேஷ்டை புரிந்த 8 பேருக்கு அபராதம்

சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் 
சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன் சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது. இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற யாழ்.குருநகரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 8 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இடம்பெற்றது. விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 8 பேருக்கும் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா வீதம் அபராதம் வழங்கியதுடன் அவர்களை எச்சரித்து விடுதலைசெய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக