புதன், 22 செப்டம்பர், 2010

37 இலங்கை அகதிகள் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும்

அவுஸ்திரேலியா அனுப்ப அழைத்து வந்து
இலங்கை அகதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது
அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் பணம் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பஸ்சில் அழைத்து வந்த 36 அகதிகளையும் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் இருந்து 37 இலங்கை அகதிகள் பஸ்சில் திருச்சி வருவதாகவும் பின் அவர்கள் கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுகக்கு செல்ல இருப்பதாகவும் திருச்சி கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் வந்தது.

குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் அந்த வழியாக வந்த ஓர் பஸ்சில் 37 பேர் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் சென்னை, மண்டபம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் இருப்பவர்கள், முகாம்களில் இல்லாதவர்கள் என்றும் அவர்களை கள்ளப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் இதற்கு அதே பஸ்சில் வந்த இலங்கை வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபரிடம் பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர் இலங்கை நீர்கொழும்பு பெரிய முள்ளு, புனித அந்தோனியார் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 26) என்று தெரியவந்தது. இலங்கையில் இருந்து கடந்த 8 ஆம் திகதி போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த சுதர்சன் பல்லாவரம் பொழிச்சலூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள தனது காதலியின் வீட்டில் தங்கி இருந்தார். மோசடி செய்யும் நோக்கத்தில் பிழைப்புக்காக அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் உள்ளவர்களை தேடினார்.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதி முகாம்களில் தங்கி உள்ளவர்கள், வெளியில் தங்கி இருப்பவர்களுக்கு வலைவீசி 36 பேரை திரட்டினார். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன. இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். அகதிகள்
அந்தந்த முகாம்களுக்கும் வெளியில் வசித்தவர்கள் அவரவர் வசிப்பிடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக