திங்கள், 27 செப்டம்பர், 2010

கல்முனை சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க 30 வரை காலக்கெடு

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க 30 வரை காலக்கெடு

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களில் சட்டவிரோதமான சுடுகலன்களை (ஆயுதம்) வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 2010.09.30ம் திகதிக்குள் தங்களது பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24ம் திகதி) கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலை மையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இத்தீர் மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம். என். எஸ். மென்டிஸ் அறிவித்துள்ளார். குறிப்பிட்ட திகதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை அனுமதிப்பத்திரமின்றி ஆயுதமொன்றை வைத்திருந்த குற்றத் திற்காக 1996ம் ஆண்டின் 22ம் இலக்க சுடுகலன் (ஆயுதம்) சட்டக்கோவை, சட்டம் 2ம் பிரிவில் திருத்தியமைக் கப்பட்ட 2(1) பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பட்சத்தில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடுமென அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார். சுற்றி வளைப்புத் தேடுதல் நடைபெறும் போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக