புதன், 18 ஆகஸ்ட், 2010

தமிழக கணக்கு,DMK34%,ADMK30%,CONGRESS12%,DMDK8%,PMK2%,DP1%,PT1%,....

இந்திய அரசியலில் தமிழகத்தின்  பங்கு மிக முக்கிய மானது. தேசிய கட்சிகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, இரண்டு கழகங்களின் தலைமையிலான கூட்டணிகளே சக்தி வாய்ந்தவையாக தமிழக தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. மூன்றாவது அணி என்று பேசப்பட்டாலும், பெரும்பாலும் தேசிய கட்சிகளும் கூட இரண்டு அணிகளில் ஒன்றில் இடம்பிடித்தே தேர்தலை சந்தித்து வருகின்றன.
எதிர்பார்ப்புகள் மிகுந்துள்ள 2011 தேர்தல் களத்தில், தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு  என்ன என்பது வரைபடம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. வேலூர் மண்டலத்தில் 7%, கடலூர் மண்டலத்தில் 10%, சேலம் மண்டலத்தில் 7% என்ற அளவில் செல்வாக்கு பெற்றுள்ள போதும் ஒட்டுமொத்த தமிழக அளவில் பார்க் கும்போது 2% வாக்குகளை பெறுகிறது.மற்றவை  6% என்பதில் சிறு கட்சி களின் வாக்குகளுடன், யாருக்கு வாக்கு என முடிவு செய்யாதவர்கள், கருத்து சொல்லாத வர்களும் அடங்குவர்.
தி.மு.க. கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உள்ளன.சிறுத்தைகளின் வாக்குபலம் ஒட்டுமொத்த தமிழக அளவில்1%இதனடிப்படையில் பார்த்தால் இந்த அணியின் மொத்த பலம், தி.மு.க 34% +காங்கிரஸ் 12% + விடுதலைச்சிறுத்தைகள் 1% = 47%
அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்(சி.பி.எம்., சி.பி.ஐ.), புதிய தமிழகம் ஆகிய வாக்குபலம் கொண்ட கட்சிகள் உள்ளன. அண்மையில் மனிதநேயமக்கள் கட்சி இணைந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக அளவில் புதிய தமிழகத்திற்கு 1% வாக்குபலம் உள்ளது. இஸ்லாமியர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள மனிதநேயமக்கள் கட்சி அந்த  செல் வாக்கை வாக்குகளாக மாற்றுவதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தவறிவிட் டது. தற்போதைய நிலையை வைத்துப் பார்க் கும்போது அ.தி.மு.க. அணியின் மொத்த பலம்,அ.தி.மு.க. 30% + ம.தி.மு.க. 3% + கம்யூ னிஸ்ட்டுகள் 3% + புதியதமிழகம்1% = 37%
அ.தி.மு.க. அணியைவிட தி.மு.க. 10% கூடுதல் பலத்துடன் தற் போதைய நிலையில்உள் ளது.
இந்நிலையில், அ.தி. மு.க. அணியில் தே.மு.தி.க. சேர்ந்தால்,தே.மு. தி.க.வின் வாக்குபலமான 8%, அ.தி.மு.க.வுக்கு கூடுதலாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த அணியில் இருக்கிறது.
நக்கீரன் கள ஆய்வில் இதுகுறித்தும் துல்லியமாக அலசப்பட்டது. தி.மு.க., அ.தி. மு.க., இரு கட்சிகளையும் விரும்பாத வர்களில் பெரும்பாலோர் தே.மு.தி.க.வுக்கு கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ள னர். இவர்களில் 4% பேர் மட்டுமே அ.தி.மு.க. + தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால் வாக் களிப்போம் என் கின்றனர்.
நாங் கள் காங்கிரசை மாற்று சக்தி யாகக் கருதி வாக்களித்து வந்தோம். அது இரண்டு கழகங் களில் ஏதாவது ஒன்றை சார்ந்து நின்றதால்,தனித்து நின்ற விஜயகாந்த்தை ஆதரித்தோம். அவரும் கழகங்களோடு கூட்டணி அமைத்தால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என தே.மு.தி.க. ஆதரவு வாக்காளர்களில் 4% பேர் தெரிவிக்கின்றனர்.
காங்கிரசும் அ.தி.மு.க.வும் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் உள்ளது. அக்கட்சி தலைமை அளித்துள்ள நம்பிக்கையே இதற்கு காரணம். தற்போதைய அ.தி.மு.க. அணியுடன் காங்கிரசின் 12% வாக்கு கள் சேர்ந்தால் மிகவும் பலம் வாய்ந்த அணியாக அ.தி.மு.க. மாறும். அதற்கான சூழல்கள் தெரியவில்லை என்பதுடன், அ.தி.மு.க. பக்கம் காங்கிரஸ் வந்தால், ம.தி.மு.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அணி மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதுபோல, அ.தி.மு.க. 30% + காங்கிரஸ் 12% +தே.மு.தி.க. 8%+ பா.ம.க. 2% என்ற வலுவான கூட்டணி அமைய லாம் என்ற கணக்கும் போடப்படுகிறது. 52% என்கிற பாதிக்கும் மேற்பட்ட வாக்கு பலத்துடன் இந்த கூட்டணி இருக்கும் என்றாலும் தொகுதி பங்கீடு, தனி மெஜா ரிட்டியில் சிக்கல், கூட்டணி மந்திரிசபை என பல பிரச்சி னைகள் இதற்குள் எழும் என்பதே யதார்த்த நிலவரம்.
இரு கழகங்களையும் சாராமல், காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் 12% + தே.மு.தி.க. 8% + பா.ம.க. 2% என்ற அளவில் 22% வாக்காளர்களை ஈர்க்கக்கூடிய ஒரு அணி உருவாகி, கணிசமான இடங்களில் வென்று, ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற கணக்கும் போடப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியும் தனக்கு சாதகமான ரீதியில் கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தாலும் தற்போதுள்ள கூட்டணிகளின் அடிப்படையில் தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. தேர்தல் நெருங்க, நெருங்க அணி மாற்றங்கள் ஏற்பட்டாலோ, அரசியல் களத்தில் புதுப்பிரச்சினைகள் ஏற்பட்டாலோ தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் நிறைந்ததாக மாறும்.

-நக்கீரன் சர்வே குழு தமிழக நிலவரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக