புதன், 18 ஆகஸ்ட், 2010

யாழ் ஆரிய குளத்தைச் சுத்தஞ் செய்து அதனையும் அதனை அண்டிய பகுதியையும்

யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக்களையொட்டி ஆலயச் சூழலில் அமைக்கப்படும் தேநீர்க் கடைகள் மற்றும் உணவுச் சாலைகள் என்பவற்றில் வைக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் உரிய இடத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகள் 500 பேர் வெளி மாவட்டங்களுக்கு இலவச சுற்றுலா பயணத்திற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடுத்த வருட இறுதிக்குள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது மிகுந்த அசுத்தமடைந்த நிலையில் காணப்படும் யாழ் ஆரிய குளத்தைச் சுத்தஞ் செய்து அதனையும் அதனை அண்டிய பகுதியையும் செப்பனிட்டு இப்பகுதியை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக