ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வெள்ளவத்தையில் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

வெள்ளவத்தையில் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
கொழும்பின் பிரஜைகள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களில் வெள்ளவத்தையும் ஒன்று! அனால் இதை அறிந்து கொள்ளவது எப்படி என்று குழம்பும் வெளிக்கிரக வாசிகளுக்கு ஒரு சில குறிப்புக்கள்.
பாதைகளில் சுக விசாரிப்புக்களும் குடும்பக் கதைகளும் 2400W சத்தத்தில் நடைபெறும். விலகி நிற்கச் சொன்னால் மக்கள் ஆத்திரமடைவார்கள்.
சிங்களத்தில் கதைத்தால் விநோதமாக பார்ப்பார்கள்!
இவர்களில் ஆங்கிலம் கதைக்கும் மக்களும் இருப்பார்கள் ஆனால் ஆங்கிலத்தில் வார்த்தைக்கு நூறு தவறு இருக்கும்.
நகருக்குள் நகரும் நகைக் கடைகளாக பெண்கள் திரிவார்கள், சில வேளைகளில் “ஐயோ சங்கிலிய அறுத்துட்டான்” என்று சத்தம் கேட்கும்.
தனியார் வகுப்புக்கள் முடிய பசங்களும் பெண்களும் நெளிந்து கொண்டு வருவார்கள். சிலது காதலிக்கும், சிலது தாடி வளர்க்கும்.
கிடைக்கும் பெயர்களில் எல்லாம் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும். Urenaus, jupiter உட்பட.
இலங்கை நாட்டில் இங்கிலாந்துக் கொடிய சந்தேகமே வேண்டாம் அவர் இங்கிலாந்தில் செல்லாத பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மாணவர்களை அனுப்பும் ஏஜென்ட். இது வெள்ளவத்தையில் அதிகமாக காணப்படும்.
இரண்டு விதமான கொள்வனவாளர்கள் இருப்பார்கள், ஒன்று பேரமே பேசாமல் வாங்கும் பணக்கார வர்க்கம் மற்றது கீழ்த்தரமான பேரத்தில் இறங்கும் அதி பணக்கார வர்க்கம். ஆனால் கடைசியில் ஜெயிப்பது கடைக்காரந்தான்.
Nolimit சிறந்த மற்றும் தேசிய ஆடைக் கொள்வனவு நிறுவனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். இது போல Royal Bakery தேசிய உணவு மதியஸ்தானமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்.
பக்கத்து தெருவிற்கு போக three wheeler அண்ணா 100/- கேட்கிறாரா? சந்தேகமே வேண்டாம் அது வெள்ளவத்தைதான்! எல்லாம் எங்கட சனம் காட்டின வழிதான். இன்று வரை லாபத்தில் ஓடும் ஒரே three  wheeler வெள்ளவத்தை three wheelerதான்!
விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதித்திருக்காது! இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் கனடா பொருளாதாரத்தை பற்றித்தான் அறிவு இருக்கும். துட்டு அங்க இருந்துதானே வருகுது!
தொடர்மாடிகள் வானத்தை மறைத்திருக்கும். டோகியோவிட்கு அடுத்தது வெள்ளவத்தைதான்!
காலையில் நினைத்து மாலையில் பொருட்கள் வாங்கும் மக்கள் இருப்பார்கள். இது ஜட்டி முதல் வீடு வரைக்கும் பொருந்தும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகம் நடைபெறும்.
வெளிநாட்டில் இருந்து விரட்டியடிக்கப் பட்ட அல்லது தாமாகவே விலகிய மாணவர்கள் ரோமியோ போல ரோட்டில் திரிவார்கள். இது சிங்கப்பூர் தொடக்கம் அமேரிக்கா வரை பொருந்தும்.
தமிழ், சிங்கள, ஆங்கில தூஷண வார்த்தைகள் தூள் பறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக