ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

காங்.,கிற்கு "செக்' வைத்த முதல்வர் : நாசூக்காக பதில்

அடுத்து காமராஜர் ஆட்சி அமைப்போம்... காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி... ஆட்சியில் பங்கு... ' என காங்கிரஸ்காரர்கள் ஆங்காங்கே கூட்டம் போட்டு முழக்கம் எழுப்பி வர, அவர்களின் கனவுகளுக்கு தனது பாணியில் முதல்வர் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தற்போதே அரசியல் கட்சியினர் ஈடுபட துவங்கி விட்டனர். முதலில் முந்திக் கொண்ட புதிய தமிழகம், அ.தி.மு.க., கூட்டணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டது. அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.,- மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும். அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மட்டும், அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்பது புரியாமல் தத்தளித்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேரும் என்றும், காங்கிரஸ் சேருமென்ற அரசியல் யூகங்களுக்கும் பஞ்சம் இல்லை.

இப்படி எதிர்க்கட்சி வலுவாக வியூகம் அமைத்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியின் உறுதிப்பாடு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. ஏற்கனவே அங்கு காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகளும் எதிரும், புதிருமான நிலையில் உள்ளன. அதின் பிரதிபலிப்பாக செல்வப் பெருந்தகை தற்போது வலுவாய்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் அணியில் இருப்பது ஒரு அடையாளம். தானாக விரும்பி, தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த பா.ம.க., ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காத விரக்தியில், இன்னும் கூட்டணி ஜோதியில், முழுமையாக இணைத்து கொள்ளாமல், பட்டும் படாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலோ இதுவரை தி.மு.க.,விற்கு ஆதரவாக மட்டுமே எழும்பி வந்த குரல்கள், தற்போது தி.மு.க.,விற்கு ஆதரவான அணி, எதிரான அணி என இரண்டாக பிரிந்து சுருதி பேதத்துடன் ஒலிக்க துவங்கி விட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் தி.மு.க.,விற்கு எதிரான அணியை வளர்ப்பதில், தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் பீட்டர் அல்போன்சும் சேர்ந்து கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் வாசனும், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் தி.மு.க.,விற்கு ஆதரவான அணியை தக்க வைத்து கொள்ள படாதபாடு படுகின்றனர். ஆனாலும் வாசன் மத்திய அரசு திட்டங்களால் மாநில அரசுக்கு தாராள நிதி வருகிறது என்பதை சமயங்களில் சுட்டிக் காட்டுகிறார்.அக்கட்சியில் மற்றவர்களோ, எந்த பக்கம் போனாலும், "ஓகே' தான் என்ற நிலையை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனாலும், தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியில், தனித்து காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி எதுவும் இல்லையென்றால் ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டன.காங்கிரஸ் தலைவர் சோனியா தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், அவரது மகன் ராகுல் அதற்கு எதிராக இருப்பதாகவும், இறுதியில் யார் முடிவு எடுக்கிறார்களோ அதன்படியே கூட்டணி அமையும் என்று அந்த கட்சியில் பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., கூட்டணியிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பு எழுந்துள்ளது.இதற்கெல்லாம் பதில் அளிப்பது போல, முதல்வரின் சமீபத்திய பேச்சுகள் அமைந்துள்ளன.

கடல் நீரை குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவில் பேசிய முதல்வர், "அடுத்த முறை நான் இல்லாவிட்டாலும், வேறு ஒருவர் தலைமையில், தமிழகத்தில் திராவிட ஆட்சி தான் அமையும்' என்றார்.கோவை கூட்டத்தில், "தற்போது மைனாரிட்டியாக இருக்கும் தி.மு.க., அரசு அடுத்த முறை மெஜாரிட்டியை பெறும்' என்று குறிப்பிட்டார் முதல்வர். இதன் மூலம், "அடுத்தது காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும், இப்போது, அக்கட்சி தயவுடன் தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் நிலை மாறி முழு மெஜாரிட்டி கிடைக்கும்' என்றும் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.

"எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிப்பது போல், கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, முதல்வர் நாசூக்காக பதில் அளித்துள்ளார். இருப்பினும், காங்கிரசின் கடிவாளத்தை தன் வசமே வைத்து கொள்வதில் தொடர்ந்து தி.மு.க., அக்கறை காட்டும் என்பதும், அதுதான் எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் கட்சித் தலைமை உணர்ந்துள்ளது' என்கின்றனர் தி.மு.க., முன்னணி பிரமுகர்கள்.

தமிழ்நேசன் - MuscatOman,பாகிஸ்தான்
2010-08-08 09:14:15 IST
காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே, முதலில் காமராஜர் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியை வெறுத்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தார். இது வரலாறு. எந்த முகத்தை வைத்துகொண்டு காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறது. காமராஜர் தற்போது உயிரோடு இல்லை. அவர் வாரிசுகளும் இல்லை என்ற தைர்யத்திலா..... மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பமும் பல தலைமுறையாக இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் கசப்பான உண்மை....
INDRAJIT - Benares,இந்தியா
2010-08-08 09:11:30 IST
கருணாநிதிக்குத் தெரியாத ஜோஸ்யமா ? காங்கிரசுக்கு இப்போது சரியான அஷ்டமத்துச் சனி என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அதைத் தொட்டவனுக்கெல்லாம் சனீஸ்வர கடாக்ஷம்தான் ! இருந்த இடத்தை விடப் பார்வைதான் மிகக் கொடியது. குறைவில்லாமல் அதுவும் இப்போது ADMK J யின் பார்வை மூலம் பிரமாதமாகக் கிடைக்கிறது ! ஏற்கெனவே, PRANAB நாக்கில் சனி அமர்ந்து இருப்பதால் தானே ' பெட்ரோல் ' விலையைக் குறைக்க முடியாது என்று மூர்க்கமாகக் கூறினார் ? கேட்கவேண்டுமா காங்கிரசின் அஷ்டம யோகத்துக்கு ? இதெல்லாம் தெரிந்துதான், கருணாநிதியும் மெள்ளச் சாணியைக் கழட்டி விடக் காய் நகர்த்தும் படலத்தைத் த்வங்கியாச்சு ! இதே கதைதான் மேற்கு வங்கத்திலும் ! மம்தா தீதீக்கு MAOISTS மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் என்று தெரிந்து, அதைத் தேர்தல் நேரத்தில் கழட்டி விட்டு வாண வேடிக்கை காட்டப் போகிறார், தீதீ ! வங்காளியர் எப்போதும், நேர்மையும், STRAIGHT FORWARD குணமும், வெளிப்படையான பேச்சும் கொண்டவர்கள். இதற்கு நேரெதிர் கேரளா ! ஆகையால், மே. வங்கத்தை வைத்துக் கேரளத்தை எடை போட முடியாது ! அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியின் தயவுதான் எப்போதும் வேண்டும் ! ஆந்த்ரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஒரிசா, இங்கெல்லாம் சனீஸ்வரர் அமர்ந்து கொண்டு காங்கிரசை தீக்ஷன்யமாகப் " பார்க்கிறார் !" பார்வை ஒன்றே போதுமே ! பல்லாயிரம் சொல் வேண்டுமா ! போதாக் குறைக்குப் பசி, அந்தோணி, இவர்கள் ரூபத்தில் (சனி & சகுனியாக ) அமைச்சரவையிலேயே அட்ட சட்டமாக அமர்ந்திருக்கிறார் ! இனி நளச் சரித்திரம்தான் காங்கிரசுக்கு ! ஆனால், அந்த நளனைப் போல் இதற்கு சாப விமோசனமே இல்லை !...
கதிரவன் - MUMBAI,இந்தியா
2010-08-08 08:47:30 IST
வரும் தேர்தலில் காங்கிரஸ் தி மு க வுடன் கூட்டணி அமைத்தோ அல்லது தே மு தி க, ப ம க போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டியிட்டால்தான் காங்கிரசுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அதைதவிர்த்து ADMK வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தால் அதை விட காங்கிரசுக்கு ஒரு தற்கொலை முயற்சி வேறொன்றும் இருக்க முடியாது. ஜெயலலிதா செய்யும் முதல் வேலையே ஏறிய ஏணியை எட்டி உதைப்பதாகத்தான் இருக்கும்....
வேல்முருகன் ந - Chennai,இந்தியா
2010-08-08 07:22:38 IST
காங்கிரஸ் தனிய நின்னால் கண்டிப்பாக டெபொசிட் காலியாகிவிடும். காங்கிரஸ், இந்தியாவின் சாப கேடு....
saran - kallal,இந்தியா
2010-08-08 06:24:34 IST
தெளிவான தைரியமான விமர்சனம் . நிருபருக்கு பாராட்டுக்கள். நன்றி ...!...
கே.கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா
2010-08-08 05:09:10 IST
தமிழகத்தில் ங்கிரசுக்கு மூடுவிழா நடத்தி 43 வருடங்கள் ஓடிவிட்டன.மாண்டவன் மீண்டுவருவதெப்படி நடக்க முடியாத காரியமோ,அதுபோல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதும் முடியாத காரியம்தான்.காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் கல்வி,பொதுப்பணித்துறை ஆகியவற்றில் நன்மைகள் எற்பட்டிருந்தாலும், மாநிலப் பிரிவினையின் போது மலம்புழா அணை,பாலக்காடு மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ,கொல்லங் கோடு,நெம்மாரா,நெல்லியாம்பதி,ஆழியாறு அணை, தேவி குளம்,பீர்மேடு,மூணார்,குமுளி,பெரியார்,ஆகிய பெரும் பான்மையான இயற்கை வளமும்,நீர்வளமும்,நிறைந்த பகுதிகளை கேரளாவிடம் பறிகொடுத்தது தமிழகத்திற்கு என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்புதான்.அதேபோன்ற காமராஜர் ஆட்சியினை மீண்டுமொருமுறை தமிழகம் சந்திக்காமல் இருப்பதுதான் காலத்தின் கட்டாயம். காமராஜரின் புகழ் பாடும் காங்கிரஸ் சில்வண்டுகளால் இதை மறுக்க முடியுமா?இல்லை உண்மைத் தமிழர்களால் இதை மறக்க முடியுமா?......
kim - TN,இந்தியா
2010-08-08 04:23:44 IST
மக்களை கொஞ்சம் பாருங்கள் !!எப்போடியோ நாடு முன்னேறினால் சரி !...
John - Kuwait,இந்தியா
2010-08-08 02:00:55 IST
கருணாநிதி is dreaming of coming to power again without congress's help. Now it is not possible for any party to capture power on its own. Karunanithi is selfish and taking care of his own family members only. He is surviving in politics by cheating poor people. He can not cheat Tamilian more. Next election Karunanithi can not come to power without Rahul's blessings. Take care Mr. Karunanithi. Don't dream in day time....
ப.raj - chennai,இந்தியா
2010-08-08 01:12:11 IST
எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை . admk 20 வருடங்களும் & dmk 20 வருடங்களும் ஆட்சி புரிந்தாகிவிட்டது . உண்மையிலே நீங்கள் நல்லது செய்திருந்தீர்கள் என்றால் மக்கள் உங்களை தேடி ஓட்டு போடுவார்களே . பிரச்சாரத்திற்கே போக தேவை இல்லை தானே . ஏன் பயம் ? ஏன் கூட்டணி ? ஏன் பணம் ? உங்கள் தோல்வியை மக்களிடம் ஒத்துகொல்லுங்கள். கோடி கோடியாய் பணம் சம்பாதித்தவன் சரித்திரத்தில் இடம் பிடிக்கமுடியாது....
குமார் - madurai,இந்தியா
2010-08-08 00:59:28 IST
kalaiyar thaan endrum...
ஜெயா - madurai,இந்தியா
2010-08-08 00:58:36 IST
dmk thaan...
raahul - bangalore,இந்தியா
2010-08-08 00:30:33 IST
கருணாநிதி நீ மூளைக்காரன் . . பாவம் காங்கிரஸ் .. உனக்கு அல்வா தான்...
கோபால் KR - CHENNAI,இந்தியா
2010-08-08 00:24:07 IST
வரவிருகின்ர மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணிவைக்கவேண்டும...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக