பாராளுமன்ற எம்.பி.க்கள் தற்போது மாதந்தோறும் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்கள். இந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளத்தை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் ஆய்வு செய்து எம்.பி.க்கள் சம்பளத்தை 3 மடங்கு அதிகரித்து ரூ.50 ஆயிரமாக்க பரிந்துரைத்தனர். இதற்கிடையே அரசு செயலாளர்கள் மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம் பெறுவதால் எம்.பி.க்கள் சம்பளத்தை ரூ.60 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடப்பட்டது.
இந்த பரிந்துரை கடந்த 2006 ம் ஆண்டு மே மாதம் முதல் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்தது. இன்று (திங்கள்) காலை டெல்லியில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எம்.பி.க்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
எம்.பி.க்கள் மாத சம்பளத்தை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தலாம் என்று கணிசமான மந்திரிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சம்பளத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய மந்திரிகள் வயலார் ரவி, அம்பிகா சோனி இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இதன் காரணமாக எம்.பி.க்கள் சம்பள உயர்வு மசோதா மீது முடிவு எடுப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இந்த வாரமே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் என்று முன்பு கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக