திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கமலுக்கு பாராட்டுவிழா- மலையாள நடிகர்கள் எதிர்ப்பு

கேரள அரசு ஆண்டுதோறும் ஒணம் பண்டிகையையொட்டி, ஓணம் சுற்றுலா வார விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஒரு திரைப்பட கலைஞருக்கு பாராட்டு விழாவும் நடத்துவது வழக்கம்.
கடந்த ஆண்டு மலையாள நடிகர் மோகன்லால் கவுரவ ராணுவ கர்னலாக தேர்வு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடத்தியது.
இந்த ஆண்டு திரையுலகில் 50 ஆண்டு சேவையை பாராட்டி கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது.
இந்த விழா வருகிற 22ம் தேதி முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடக்கவிருக்கிறது.
இதற்கிடையில் கேரள அரசு கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு மலையாள நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மா நடிகர் சங்கத்தின் தலைவர் இன்னொசென்ட்,
’’கமலைப் போல் 50 ஆண்டுகள் சினிமாவுக்கு சேவை செய்த நடிகர்கள் இங்கும் இருக்கும்போது, எங்களை கலந்தாலோசிக்காமல் அரசு தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது.
அதனால் கமலுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடிகர் சங்கம் பங்கேற்காது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளும் யாரையும் தடுக்காது’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக