வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வம்சம். முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி

பள்ளிப்பருவ குழந்தைகளை வைத்து பசங்க என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்ற டைரக்டர் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் புதிய படம் வம்சம். முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் நாயகியாக சுனேனா நடித்துள்ளார். வம்சம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:-
* 20 வருடத்திற்கு முன் நியாய தராசு, கோபுரவாசலிலே போன்ற படங்களை தயாரித்தவர் மு.க.தமிழரசு. சினிமாவே வேண்டாம் என திரையுலகை விட்டு விலகி இருந்தவர் தனது மகனுக்காக ரூ.5 கோடி முதலீட்டில், வம்சம் படத்தை தயாரிக்கிறார்.
* டைரக்டர் பாண்டியராஜ் எழுதியிருக்கும் சுவடு சுவடு என்ற பாடலை டைரக்டர்கள் சசிக்குமார், சமுத்திரகனி மற்றும் பாண்டியராஜ் மூவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.
* மு.க. தமிழரசு அவர்களின் இரண்டாவது மகன் அருள்நிதி, ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
* நடிகர் கிஷோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அருள்நிதியின் அப்பாவாக ரவுடி ரத்தினம் கேரக்டரில் மிரட்டியுள்ளார்.

* புதுக்கோட்டை முழுவதும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான வீராச்சிலை, திருமயம், பனையபட்டி, நர்சாந்துபட்டி போன்ற பகுதிகளில் கிட்டதட்ட 85 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் பாண்டியராஜ்.

* படத்தில் முக்கியமாக 15 திருவிழாக்களை பெரிய அளவில் படம் பிடித்துள்ளனர். குதிரை பந்தயம், மஞ்சுவிரட்டு, மாட்டுபந்தயம் ஆகிய காட்சிகள் நேரடியாகவே பயன்படுத்தி உள்ளனர்.
* பசங்க படத்தில் வாத்தியராக நடித்த ஜெயபிரகாஷ், வம்சம் படத்தில் சீனிகண்ணு என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
* சுனேனா இதுவரை நடிக்காத பாவடை தாவணியில், முழு கிராமத்து பெண்ணாக மலர்கொடி என்ற கேரக்டரில் வாழ்ந்துள்ளார்.
* பசங்க படத்தில் புஞ்சிமா, பக்கடா, குட்டி மணி, மனோன்மணி ஆகிய நான்குபேரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அருள்நிதியின் அம்மாவாக நடிகை அனுதமா மூன்று விதமான கேரக்டர் ரோலில் நடித்துள்ளார்.
* என்னங்க என்ற புதுக்கோட்டை வட்டார வழக்கு வார்த்தையை ஒரு பாடலாகவே பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.
* இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி இரண்டு விதமான கேமிராவை பயன்படுத்தி உள்ளார். நேரடி காட்சிகளுக்கு சூப்பர் 35வையும், பிளாஸ்பேக் காட்சிகளுக்கு சூப்பர் 16 கேமிராவையும் பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்க்கும் போது இந்த வித்தியாசம் தெரியவருமாம்.
* இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் தாஜ் நூர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக