புதன், 4 ஆகஸ்ட், 2010

நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கை சென்னையில் விசாரிக்க

நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் [^] விசாரிக்க உச்சநீதிமன்றம் [^] இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்த மூத்த ஹீரோயின் சுகன்யா. இவருக்கும், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் [^] நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்காவில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் 2003ம் ஆண்டு சென்னை திரும்பிய சுகன்யா, மீண்டும் கணவரிடம் போகவில்லை. மாறாக இங்கேயே இருந்து விட்டார்.இந்த நிலையில் திடீரென குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீதரனுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதரன் கோர்ட்டுக்கு வரவில்லை. இதையடுத்து எக்ஸ் பார்ட்டி தீர்ப்பாக,சுகன்யாவுக்கு சாதகமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

இந்த நிலையில் இதை எதிர்த்து அப்பீல் செய்தார் ஸ்ரீதரன். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடியானது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டார் ஸ்ரீதரன். அதில், தனக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதாகவும், தனக்கும் சுகன்யாவுக்கும் அமெரிக்காவில் திருமணம் நடந்ததால் சென்னை கோர்ட் விவாகரத்து வழக்கை விசாரிக்க கூடாது என்றும், வெளிநாட்டு சட்டப்படிதான் இவ்வழக்கை அணுக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய பெஞ்ச் பரிசீலனை செய்து விசாரணைக்கு அனுமதித்தது.மேலும் சென்னை குடும்ப நல கோர்ட் சுகன்யா விவாகரத்து வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. விளக்கம் அளிக்குமாறு கூறி சுகன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக