்
ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள்இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டியின் தலைவரான கார்த்தி சிதம்பரம் .
கூட்டம் போடாமல் வளர முடியாது:
சென்னை மந்தைவெளியில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கார்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்த தயங்கி வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் வளர முடியாது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சர்ச்சையை கண்டு அஞ்சக்கூடாது. தங்கள் நிலையை விளக்க வேண்டும்.
தமிழும், சிங்களமும் இணைந்து இருக்க முடியாதா?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இலங்கை பிரச்சினையை பற்றி பேசுவதே கிடையாது. இந்தியாவில் பல மொழிகள் பேசுபவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதுபோல, இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய 2 மொழிகள் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாதா? என்று ராஜீவ்காந்தி கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது.
ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும். இலங்கை பிரச்சினை பற்றி பல ஆண்டுகள் மவுனமாக இருந்ததால் தான் தற்போது நம்மீது சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்
Comments poopathi:
இந்த உண்மை புலிகளைத்தவிர ஏனையோருக்கு மிக நன்றாகவே தெரியும். புலிகளுக்கும் அவர்தம் தொண்டர் குண்டர் மற்றும் ரசிகர்களும்தான் தெரியவில்லை. நல்லவர்கள் சொல்வதை கேட்பதில்லை என்பதே ஈழத்தமிழர்களின் தாகம். சதா புகழ்மாலை பாடுவதே தமது தேசிய கடமையாக எண்ணி நல்ல சந்தர்பங்களை எல்லாம் தட்டி கொட்டி குட்டிச்சுவராக்கிய தவிர வேறு எதைத்தான் செய்தார்கள்?
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு