சனி, 21 ஆகஸ்ட், 2010

பாரிய எரிபொருள் கொள்ளை அம்பலம்: 17 பேர் கைது!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாப னத்திலிருந்து விநியோகிக்கப்படும் எரி பொருட்களை பல்வேறு வழிமுறைகளில் சட்ட விரோதமாக பெற்று சேகரித்து வைத்துள்ள இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பொலிஸ்மா அதிபரின் நேரடி உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான எரிபொருள் மற்றும் எண்ணெய் வகைகளை திருடி நிலத்துக்கு அடியில் குதங்களை அமைத்து சேகரித்து வந்துள்ளனர். இவர்கள் தரக்குறைவான எண்ணெய் வகைகளை கலவை செய்து இலங்கை முழுவதும் விநியோகித்து வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடவத்தஇ சிரிமெட்டியாகார, தெஹிலவத்த, அத்துருகிரிய போன்ற பகுதிகளில் இவ் வாறான சட்டவிரோத எரிபொருள், எண்ணெய் களஞ்சிய சாலைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் நிலத்துக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குதங்களும், சில இடங்களில் வெளியே பாரிய எண்ணெய்க் குதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. நீண்ட காலமாக செய்து வந்த பாரிய எரிபொருள், எண்ணெய் மோசடி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி எண்ணெய்க் குதங்கள் கைப்பற்றிய இடத்தில் தரக் குறைவான எண்ணெய் வகைகளை கலப்படம் செய்ததற்கான சான்றுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சொலிக்கினம் (களுதெல்) மற்றும் டீசல் உட்பட பெருந்தொகையான எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜே. பி. பி. பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரும்இ குற்றத் தடுப்பு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

www.neruppu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக