திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கலைஞரின் ரகசியங்களை வெளியிடுவேன் :

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  கலைஞரின் ரகசியங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மு.க.அழகிரி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கெங்கையம்மன் நகர் 140வது வட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த தின பொதுக்கூட்டம் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது,இந்த கூட்டணிக்கு வலியை ஏற்படுத்துக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே.நான் கேட்கிறேன்; நீங்கள் மட்டும் என்ன செய்கின்றீர்கள்.31.7.2010 அன்று திருச்செந்தூரிலே அனிதா ராதாகிருஷ்ணன் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர்....அனிதா ராதாகிருஷ்ணன் ஆம்பளையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இல்லை இரண்டுக்கும் மத்தியிலா என்று தெரியவில்லை.
அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய அந்த கூட்டத்திலே, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பாராளுமன்றத்திலே மிகவும் சுறுசுறுப்பாக பேசக்கூடியவர்; பாராளுமன்றத்திற்கு தவறாமல் போகக்கூடியவர்; அருமை நண்பர் மு.க.அழகிரி கலந்துகொண்ட அந்த கூட்டத்திலே..திமுகவின் முக்கியத்தலைவர் ஒருவர் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.எங்களுடைய எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எங்களுடைய ஆதரவிலே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள நீங்கள்.ஆனால்,  தனிப்பட்ட முறையில் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவு கொச்சையாக அந்த கூட்டத்திலே பேசப்பட்டது.
இதை கலைஞர் அவர்கள் கேட்டாரா ஏன் என்று. நான் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த குறுந்தகடு இன்று தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதை போட்டுக்காண்பித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்து போய்விடுவார்கள்.
அவ்வளவு கேவலமாக  ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும், ஜெயலலிதாவையும் பேசப்பட்டிருக்கிறது. அரசியல் வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு முன்பு சூட்கேஸ்கள்தான் தேவைப்பட்டன. ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறீர்களே. யாரால்? நாங்கள் போட்ட பிச்சைதானே.எங்களுடைய ஆதரவினால்தானே முதல்வராக, துணைமுதல்வராக வலம் வருகிறீர்கள்.தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்குகிறீர்கள். நாங்களும் பதிலுக்கு தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்தால்...பாவம்..தாங்க மாட்டீர்கள்.தொடர்ந்து இப்படி நீங்கள் பேசினால், கலைஞர் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டி வரும். 87 வயது என்று சொன்னால் அதில் 77 வயது சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தால் பல சங்கடங்கள்; பல கஷ்டங்கள்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக