சனி, 7 ஆகஸ்ட், 2010

அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல்போர் நீதிமன்றத்தில் சாட்சியம்

டர்பன்: லைபீரிய அதிபர் மீதான போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்து நேற்று சாட்சியம் சொன்னார் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல்.

லைபீரியா நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் மீதான போர்க் குற்ற வழக்கு, ஐ.நா.விசேஷ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அளித்த விருந்தின் போது, சூப்பர் மாடல் நவோமி கேம்பலுக்கு சார்லஸ் டெய்லர் ப்ளட் டயமண்ட் எனப்படும் காஸ்ட்லி வைரம் பரிசளித்தார் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, இதுபற்றி சாட்சியம் அளிக்க நவோமி கேம்பலுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று, நவோமி கேம்பல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு வைரக்கற்கள் அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அதை அளித்தது யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Post Comments ]
பதிவு செய்தவர்: நமச்சிவாய
பதிவு செய்தது: 07 Aug 2010 6:19 pm
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பதிவு செய்தவர்: குழப்பி இருப்போர் சங்கம்
பதிவு செய்தது: 07 Aug 2010 12:02 pm
சரி சரத் ஜி , சரத்து ஜி நீங்க எந்த கட்சி இல இறுகிக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக