புதன், 25 ஆகஸ்ட், 2010

கு.க., செய்ய அவகாசம் கேட்ட பெண் :குழந்தையுடன் வெளியேற்றிய நர்சுகள்

ராமநாதபுரம் :கு.க., செய்ய அவகாசம் கேட்ட பெண்ணை, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிய நர்சுகளின் செயல், பலரையும் மனவேதனை அடைய செய்தது.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எட்டுகுடியைச் சேர்ந்தவர் டிரைவர் செங்கோல் பிச்சை(26). இவர், சத்திரக்குடி அருகே எட்டிவயலைச் சேர்ந்த குமுதபிரியங்கா(22) என்பவரை காதலித்து மணம் முடித்தார். பெற்றோர் எதிர்ப்பால், ராமநாதபுரம் சோத்துரணியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஜோஸ்லீனா(2) என்ற பெண் குழந்தை உள்ளது.

பிரியங்கா மீண்டும் கற்பமுற்று, பிரசவத்திற்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த ஆக., 21ல் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் ஆண் குழந்தை பிறந்த நிலையில், "குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு' நர்சுகள் வலியுறுத்தினர்.இதற்கு ஒப்புக்கொண்ட பிரியங்கா, தனது வயது மற்றும் உடல் வலுவின்மையை கூறி, ஆறு மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறினார்.அதற்கு ஒப்புக்கொண்ட நர்சுகள், அதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். இதற்கிடையில், நேற்று செங்கோல் பிச்சை இல்லாத நேரத்தில், பிரசவ வார்டுக்கு வந்த நர்சுகள், பிரியங்காவை கு.க., ஆபரேஷன் செய்யுமாறு வலியுறுத்தினர்.அவர் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரை குழந்தையுடன் வெளியேற்றி கதவை மூடினர். குழந்தை பிறந்த இரண்டு நாட்களே ஆன நிலையில், துணையின்றி கையில் கைக்குழந்தையுடன் பிரியங்கா வீடு திரும்பினார்.

இந்த விவரம் தெரியாமல் மருத்துவமனைக்கு வந்த செங்கோலுக்கு, அங்கு மனைவி இல்லாதது அதிர்ச்சி அளித்தது.அங்கிருந்த நர்சுகளும் முறையான பதில் தரவில்லை. வீட்டுக்கு வந்து பார்த்த போது, மருத்துவமனையில் தரப்பட்ட சீருடை மற்றும் குழந்தையுடன் இருந்த மனைவியை பார்த்து, செங்கோல் கதறி அழுதது பலரையும் மனம் கனக்க செய்தது.குமுதபிரியங்காவிடம் கேட்ட போது, "கு.க., செய்ய காலஅவகாசம் கேட்டேன். இரக்கமின்றி குழந்தையுடன் என்னை வெளியேற்றினர். குழந்தைக்கு எந்த பரிசோதனையும் செய்ய மறுத்துவிட்டனர்' என்றார்.இது தொடர்பாக கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது, "கு.க., செய்வதை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது. அதிலும், இவர் இளம்பெண்ணாக இருக்கும் நிலையில், இச்சம்பவத்தை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

க.sasikumar - Singapore,இந்தியா
2010-08-25 07:18:38 IST
அட சீ இந்த பொம்பளைகளை எல்லாம் யாரு நர்ஸ் வேலைக்கு வர சொன்னா?நீயும் ஒரு பொம்பளை தானே. உனக்கு மனசே இல்லையா? உங்களை எல்லாம் நர்ஸ் ன்னு சொல்லவே வெட்கமா இருக்கு. கு.க பண்றது அவர்களுடைய சொந்த முடிவு. அத பண்ண சொல்லி சொல்லறதுக்கு நீ யாரு?நீ சோறு தானே சாப்பிடுற? பாவம் குழைந்த பிறந்த ஒரு வாரம் தான் அதுக்குள்ளே இப்படி வெளிய அனுப்பினால் அந்த பெண் என்ன செய்வாள்....
பாமரன் - chennai,இந்தியா
2010-08-25 07:11:06 IST
மக்கள் தொகை 100 கோடி ஆன நிலையில், நர்சுகள் செய்தது சரியாகவே தெரிகிறது...
shan - singapore,இந்தியா
2010-08-25 06:32:00 IST
அந்த ஹோச்பிடலில் உள்ள அனைவருக்கும் கு.க. செய்ய அரசு ஆணையிட வேண்டும். ஆண்கள் உள்பட . நன்றி ....
Nazeer - JEDDAH,சவுதி அரேபியா
2010-08-25 05:42:57 IST
கலெக்டர் அவர்கள் தயவு தாட்சண்யமின்றி சமபந்தபட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்....
ammiya - DenHelder,நெதர்லாந்து
2010-08-25 02:30:36 IST
இது என்ன அநியாயம்?கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து ஒப்புதல் கையொப்பம் வைத்தால் தவிர,டாக்டர்கள் கூட தங்களின் இஷ்டத்துக்கு ஆபரேஷன் செய்ய முடியாது.இது இப்படி இருக்க நர்சுகள் எப்படி இதில் தலையிடலாம்?அதுவும் இரு நாள் பிரசவமான ஒரு பெண்ணையும் ,சிசுவையும் நடுத் தெருவில் விட்டுவிட்டார்களே,அந்தப் பாவிகள்.ஐயா,இந்த பாவி நர்சுகளை,இங்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள்,எப்படி நர்சுகள் நோயாளிகளைப் பராமரிக்கிறார்கள் என்று.......அவர்களை கை கூப்பிக் கும்பிடணும் வேணும்....
கமல் - சென்னை,இந்தியா
2010-08-25 02:07:46 IST
This is atrocious those nurses should be sacked. Heartless people....
தீபன் லால் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-25 02:04:35 IST
அந்த செவிலியர்களின் செவிலியர் உரிமத்தை உடனே ரத்து செய்து இனிமேல் அவர்கள் உலகத்தில் எந்த ஒரு இடத்திலும் செவிலியர் பணி செய்ய கூடாதபடி அவர்களின் பட்டத்தை தடை செய்ய வேண்டும். மீண்டும் கைக்குழந்தையுடன் அந்த சிறு வயது தாயை ஈவு இரக்கமின்றி மருத்துவமனையை விட்டு வெளியேற்றிய குற்றத்துக்காக ஜெயிலில் அடைக்க வேண்டும்...
Gopinath - US,யூ.எஸ்.ஏ
2010-08-25 02:02:12 IST
This is ridiculous who ever did this should be punished severely....
ராஜன் - சென்னை,இந்தியா
2010-08-25 02:01:04 IST
இரக்கமற்ற ஜென்மங்கள் இந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்சுகள். இவர்களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது. இது போன்ற குற்றங்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் சில விதிமுறைகளை அட்டவணையாக மாட்ட வேண்டும். இது போன்ற செயல்கள் நடைபெற்றால் , அதை தெரிவிக்க எல்லா மருத்துவமனைகளிலும் ரிப்போர்ட் செய்ய ஒரு டாக்டர் நியமிக்க படவேண்டும். பொதுமக்கள் தங்கள் சுயஉரிமை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் இது போல் நடந்தால் அந்த மருதுவமனையே மூடப்படும் என்று சட்டம் உள்ளது....
ஹாஜா அப்துல் காதர் - கூத்தாநல்லூர்,இந்தியா
2010-08-25 01:58:03 IST
குடும்பக்கட்டுப்பாடு செய்வது என்பது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்வது. நுர்சுகள் முடிவெடுப்பது அல்ல. ஏன் நர்சு டாக்டர் கட்டாயப்படுத்துவது தவறு, உடல் தகுதி இருந்தால் பொருளாதார வலிமை இருந்தால் பெற்று கொள்ளலாம். இதற்கு டாக்டர் நர்சுகள் அரசு குடும்ப கட்டுபாட்டிற்கு கட்டாயப்படுத்த அவசியம் இல்லை...
செங்கோடன் - அல்க்ஹூர்,இந்தியா
2010-08-25 00:57:36 IST
நர்சம்மா நியாயமா இது. மாதம் 10 கு. க பண்ணவேண்டும் என்று டாக்டர் சொல்லி இருந்தாரா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக