நாடு கடந்த தமிழீழக்காரர்களா, உலகத் தமிழர் பேரவைக் குழுவா? அல்லது புலிச் சொத்துக்களின் பினாமிகளா?
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனப்படுகொலையினை மேற்கொண்டதாக புலிகளின் ஊடகங்களும், புலிப் பினாமிகளும் சர்வதேச அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த 2009 ம் ஆண்டு, இலங்கையின் வடக்கு பகுதிகளில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அரச படைகள் திட்டமிட்டு கொலை செய்தன என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை இதுவெனவும் புலிப் பினாமிகளின் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இறுதி இருவாரங்களில் 7 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பகுதி அமைப்புகளினால் கூறப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புலிகள் சார்பு ஊடங்களினால் கூறப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி லட்சக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டதாக தமிழகத்தினை சேர்ந்த கோமாளிகள் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்து கவலை கொள்வதினை காட்டிலும் அதனை வைத்து அரசியல் செய்யும் ஆர்வமே இங்கு அதிகமாக இருப்பதினை பார்க்கலாம்
பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகளும், சிங்களப் பொது மக்களுக்கெதிரான தாக்குதல்களும் எவ்வண்ணம் சிங்கள இனவாதிகளுக்கு பெரிதும் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. சிங்கள இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதின் மூலம் தமிழ் தேசிய போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று பிரபாகரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எப்படி விளங்கி கொண்டார்களோ?
மஹிந்தாவை மகுடம் தரிக்க வைக்கப் பிரபாகரன் பெற்றுக்கொண்ட பணம் எத்தனை கோடி ரூபா என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும், பணப் பரிமாற்றம் நடந்தது என்பதில் எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தனது கொந்துராத்து வேலையாக எடுத்துக் கொண்ட பிரபாகரன், அந்த உரிமைப் போராட்டத்தை மஹிந்தாவிடம் அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொண்ட கேவலத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளத் தவறியிருந்தார்கள். மஹிந்தாவை இலங்கையின் சக்கரவர்த்தியாக்கிய புலித்தலைவன், மாவிலாற்றைப் பூட்டி முரண்டு பண்ணி, தனது குறுநில ஆட்சியையும் பறிகொடுத்ததோடு, தனது வம்சமே இல்லாது அழிந்துபோய்விட்டார். பிரபாகரன் தமிழ் தலைவர்கள் பலரையும், சகோதர இயக்க தோழர்கள் ஆயிரக்கணக்கணோரையும், தனது இயக்க இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலரையும் கொலை செய்தமை அவருக்கு இருந்த தலைமை வெறியும், இயல்பாகவே அவரிடம் குடிகொண்டிருந்த கொலை வெறிபிடித்த மனநோயும் தான் காரணம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற புலிகளின் சுலோகம் போல 'செத்தது பத்தாது' என்பதுவும் புலிகளின் உத்தியோகப்பற்றற்ற சுலோகம் தான். தங்களது போராட்டத்தின் பால் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்குப் பொதுசனங்கள் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது புலிகளின் பெருவிருப்பாக இருந்து வந்தது.
கிளிநொச்சியை இலங்கை இராணுவம் நெருங்கியதும் யாழ்ப்பாணம் கத்தோலிக்க மேற்றாணியார் (பிஷப்) தோமஸ் சௌந்திரநாயகம் அவர்கள் புலிகளிடம் ஒரு அவசியமான அவசரமான வேண்டுகொள் விடுத்திருந்தார். அதாவது யுத்தத்துக்குள் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் வேண்டிக் கொண்டார். ஆனல் அந்த அப்பாவி மக்களை புலிகள் தமக்கான மனிதக் கேடயங்களாகப் பாவித்து கொன்று போட்டு விட்டார்கள். இதுதான் மிகப் பெரிய போர்க் குற்றம்.
முல்லைத்தீவில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் புலிகளிடம் இருந்து தப்பிவந்த போது துப்பாக்கி முனையில் தடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் படம் பிடிக்கப்பட்டு சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் இருக்கிறது. புலிகளின் போர்க் குற்றத்துக்கு இதுவும் மிகப் பெரிய சாட்சியாகும்.
புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி வந்த போது, புலிகளால் சுட்டக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவு செய்யப் பட்டிருக்கிறது
புலிகளிடம் இருந்து தப்பிவந்து இராணுவத்திடம் சரணடைந்த மக்கள், இராணுவத்தினரின் முன்னணி அரங்கில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் கரும்புலிகளைக் கொண்டு தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் பச்சிளங்குழந்தைகள், பெண்கள் உட்பட பல மக்கள் கொல்லப்பட்டார்கள். பொருளாதார மையங்களின் மீதும், பொதுமக்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தியது யுத்த குற்றம் ஆகாதா,பலாத்காரமாகக் கூட்டிச் சென்ற பாடசாலைச் சிறுவர் சிறுமியரை (போதிய பயிற்சியுமின்றி) யுத்தத்தில் ஈடுபடுத்தியது மிகப் பெரிய யுத்தக் குற்றமாகும்.
அவ்வப்போது அரசாங்கம் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு மக்களைச் செல்ல விடாது புலிகள் தடுத்தனர். இதுவும் போர்க் குற்றத்துக்குள் தான் அடங்கும். அதையும் மீறி மக்கள் யுத்த சூனியப் பகுதிக்குள் சென்று விட்டால் தாமும் தமது ஆயுதங்களுடன் மக்களுடன் மக்களாகக் கலந்து இருந்து கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர்.
இப்படியாகப் புலிகள் செய்த போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனாலும் புலிகள் செய்த எண்ணுக்கணக்கற்ற போர்க் குற்றங்களுக்காக யார் மீது விசாரணை நடத்துவது என்பது தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். ஏனெனில் புலித்தலைவன் பிரபாகரன் உட்பட, புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் எல்லோரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். எஞ்சி இருப்பது யார்?
புலிகள் சார்பாக பல மட்டங்களில், பல கட்டங்களில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உருத்திரகுமாரன் இருக்கிறார்.
புலிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியவர்கள், அவர்களுக்காகப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் செய்தவர்கள், சுவாமி வேடம் போட்ட ஆசாமிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.
புலித்தலைவருக்கு விசுவாசமாக உழைப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து, புலிகளின் பிரதிநிதிகளாகத் தேர்தல்களில் போட்டியிட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கிறார்கள்.
புலிகளின் யுத்தத்துக்காக நிதி சேகரித்த உலகத் தமிழர் இயக்கம் மற்றும் அது போன்ற புலிகளின் பினாமி அமைப்புக்களும் அவற்றின் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஆனையிறவு இராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டவுடன், யுத்தத்தைத் தொடர்வதற்காகப் புலிகளால் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் மீது புலகள் செய்த யுத்தகாலக் குற்றச் செயல்களுக்காக வழக்குத் தொடரலாம்.
குற்றம் செய்தவனிலும் பார்க்க, குற்றம் செய்யத் தூண்டியவனுக்கும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தவனுக்கும் தான் தண்டனை அதிகம்.
www.sooddram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக