திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கட்டுநாயக்கா பலாலி விமான சேவை விரைவில் ஆரம்பமாகும்

வருட இறுதியில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்திற்கும் இடையே பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகளுக்காக 50 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா தெரிவித்துள்ளார்.
குடாநாட்டின் வாழும் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சேவை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் ஒரு சேவை மட்டுமே இடம்பெறவுள்ளது.
மேலதிக சேவைகள் மக்கள் தேவைக்கு அமைய அதிகரிக்கப்படும் அதேவேளை இந்த சேவைக்காக சாதாரண கட்டணங்களே அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக