ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

இலங்கையில் 30,000 பாலியல் தொழிலாளர்கள்

இலங்கையில் நாடு முழுவதும் சுமார் 30,000 - 40,000 பாலியல் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுகாதாரக் கல்விப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளது. இத்துறையிலுள்ள தனிநபர்களும் நிலையங்களும் இரகசியமாக இயங்குவதால் இவ்விடயத்தில் துல்லியமான கணக்கெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் உள்ளுர் பாலியல் தொழிற்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் மூலம் இவ்விபரம் வெளியாகியுள்ளது என இப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டாக்டர் சாந்த ஹெட்டி ஆரச்சி கூறினார். தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30000 முதல் 40000 வரை இருக்கலாம் என அவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்புபோல் அல்லாமல் மசாஜ் நிலையங்கள் என்பன போன்ற பெயரில் பல விபசார நிலையங்கள் செயற்படுவதாக டாக்டர் ஹெட்டி ஆரச்சி தெரிவித்தார். அத்துடன் வான்கள் மற்றும் அது போன்ற வாகனங்கள் மூலம் இயங்குகின்ற நடமாடும் நிலையங்களிலும் இப்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக