வியாழன், 15 ஜூலை, 2010

பிரான்ஸ் குடியரசு தினம் ்,டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகப் பங்குகொண்டார்

பிரான்ஸ் நாட்டின் தேசிய குடியரசு தினத்தினையொட்டி கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட விசேட நிகழ்வொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் றொபிச்சொன் கிறிஸ்ரீன் தலைமை தாங்கியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகப் பங்குகொண்டார். பிரான்ஸ் நாட்டு தேசிய குடியரசு தின நிகழ்வுகளில் அமைச்சர்கள் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் தூதராலய உயரதிகாரிகள் உட்பட இலங்கையிலுள்ள பிரான்ஸ் மக்களும் பெருமளவில் பங்குகொண்டனர்.

இன்றைய நிகழ்வில் கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவரின் அழைப்பின்பேரில் பிரதம அதிதியாகப் பங்குகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விசேட உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக