வியாழன், 15 ஜூலை, 2010

‘அந்தரங்கம்,ஆண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய படமிது.

புதுமுகங்கள் நடித்துள்ள படம் ‘அந்தரங்கம்Õ. வரும் 16ம் தேதி வெளிவருகிறது. இந்த படம் சென்சார் போர்டு பார்வைக்கு சென்றபோது, படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்த்து சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய படமிது. அவர்கள் தொடர்பான படுக்கையறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றதுதான் அதிகாரிகளின் அதிர்ச்சிக்கு காரணம். அதை நீக்கிவிட்டு படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார்.


இது குறித்து படத்தின் இயக்குனர் ருக்மாங்கதன் கூறியதாவது: ஆண் பாலியல் தொழிலாளி கலாசாரம் வெளிநாட்டைச் சேர்ந்தது. ஆனால் அது சென்னை வரை வந்துவிட்டது என்பது கசப்பான உண்மை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இது பற்றி ‘தமிழ் முரசுÕ நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. அப்போது உருவான கதைதான் இது. ஆண் பாலியல் தொழிலாளி எப்படி உருவாகிறார்கள், அவர்கள் வலையில் பெண்கள் எப்படி விழுகிறார்கள் என்பதுதான் கதை. பெண்கள் பாலியல் தொழிலில் விழுவதற்கு ஆண்கள் காரணமாக இருப்பதைப்போல ஆண்கள் இந்த தொழிலில்
இறங்குவதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். அதை பற்றி படத்தில் சொல்கிறேன். படுக்கையறை காட்சிகளை மட்டும் சென்சார் நீக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக