கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
ஆசாத் காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும்போது, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கக்கூடாது எனக் கேட்கிறீர்கள்.
காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். அது ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரே ஆசாத் காஷ்மீர் ஆகும்.
ஆனால், இலங்கை தனி நாடு. அங்கிருந்து அகதிகளாக வந்தவர்கள் தற்காலிகமாக இங்கு வசிக்கலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக