ஞாயிறு, 11 ஜூலை, 2010

கூத்தாடி சீமானை தேடி போலீசார் தேடுதல் வேட்டை ..

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டைரக்டர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சீமானை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஈழத் தமிழர் படு கொலையை கண்டித்தும்,    தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தில் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள்,   எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்
சிங்கள ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்னர் கூட இலங்கை ராணுவம் இது போன்ற அட்டூழியத்தை நடத்திக் காட்டியுள்ளது.     தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்க முடியாது. இதே நிலை நீடித்தால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்கள் யாரும் வெளியில் நடமாட முடியாது.
இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
சீமானின் இந்த பேச்சு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் 152-ஏ (வன்முறையைதூண்டும் வகையில் 2 சமூகத்தினரை பிளவு படுத்தும் வகையில் பேசியது) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சீமானை கைது செய்ய நேற்று இரவு விருகம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சீமான் இல்லை. விடிய விடிய அங்கேயே போலீசால் காத்து கிடந்தனர். ஆனால் இரவு முழுவதும் சீமான் வீட்டுக்கு வரவில்லை.
அவரது செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் சீமான் தலைமறை வாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
வட சென்னை இணை கமிஷனர் சேசசாயி மேற்பார்வையில் சீமானை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். சீமானை போலீசார் தேடுவதை அறிந்ததும் அவரது வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக